322 ரன்.. 99 ரன் வித்தியாசம்.. நெதர்லாந்தை சுருட்டி புள்ளிப் பட்டியலில் நியூசிலாந்து ஆதிக்கம்.. விறுவிறுப்பாகும் உலக கோப்பை!

0
592
Santner

இன்று ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில் ஹைதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் நியூசிலாந்து அணியும் நெதர்லாந்து அணியும் மோதிக்கொண்ட போட்டி நடைபெற்றது.

நியூசிலாந்து அணி தனது முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்தை வென்று இருந்தது. அதேசமயத்தில் நெதர்லாந்து தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக இதே மைதானத்தில் தோல்வி அடைந்திருந்தது.

- Advertisement -

இந்த நிலையில் இந்தப் போட்டியிலும் டாசில் வெற்றி பெற்ற நெதர்லாந்து பந்துவீச்சை முதலில் தேர்ந்தெடுத்தது. கடந்த ஆட்டத்தில் சதம் அடித்த கான்வே 32 ரன்களில் வெளியேறினார். மற்றுமொரு துவக்க ஆட்டக்காரர் வில் எங் சிறப்பாக விளையாடி 70 ரன்கள் எடுத்தார்.

மேலும் இந்திய வம்சாவளி வீரர் ரச்சின் ரவீந்திர இந்த போட்டியில் 51 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இதற்கு அடுத்து டேரில் மிட்சல் 48, கேப்டன் டாம் லாதம் 53, கிளன் பிலிப்ஸ் 4, மார்க் சாப்மேன் 5, சான்ட்னர் 17 பந்துகளில் 36, மேட் ஹென்றி 10 என ரன்கள் எடுக்க 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு, நியூசிலாந்து அணி 322 ரன்கள் குவித்தது. நெதர்லாந்து தரப்பில் ஆரியன் தத், வான் டேர் மெர்வ் மற்றும் பால் வான் மீக்கரன் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினார்கள்.

இதற்கு அடுத்து பெரிய இலக்கை நோக்கி களம் இறங்கிய நெதர்லாந்து அணிக்கு விக்ரம்ஜித் சிங் 12, மெக்டொனால்ட் 16, காலிக் அக்கர்மேன் 69, பாஸ் டி லீட் 18, தேஜா 21, ஸ்காட் எட்வார்ட்ஸ் 30, சைப்ரண்ட் 29, வான் டேர் மெர்வ் 1, ரியான் கிளேன் 8, ஆரியன் தத் 11, பால் வான் மீக்கரன் 4* ரன்கள் எடுக்க நெதர்லாந்து அணி அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 223 ரன்கள் மட்டும் எடுத்து, 99 ரன்கள் வித்தியாசத்தில் இரண்டாவது தோல்வியை அடைந்தது. அதே நேரத்தில் நியூசிலாந்து தொடர்ச்சியாக இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது. புள்ளி பட்டியலில் முதலிடத்தில் வலிமையாக நீடிக்கிறது.

- Advertisement -

நியூசிலாந்து பந்துவீச்சில் மிச்சல் சான்ட்னர் ஐந்து விக்கெட்டுகள் கைப்பற்றினார். உலகக் கோப்பையில் ஐந்து விக்கெட் கைப்பற்றிய முதல் நியூசிலாந்து சுழற் பந்துவீச்சு வீரர் என்ற சிறப்பையும் பெற்றார். மேலும் பேட்டிங்கில் 37 ரன்கள் எடுத்திருந்த காரணத்தினால் இவரே ஆட்டநாயகனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.