32 வருடங்கள்.. கேன் வில்லியம்சன் மாஸ் ரெக்கார்ட்.. அதிரடி கம்பேக் இன்னிங்ஸ்!

0
632
Williamson

இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கு முன்பாக பங்களாதேஷ் நாட்டுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் செய்த நியூசிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடியது.

இதற்கு அடுத்து தற்பொழுது மீண்டும் பங்களாதேஷ் நாட்டிற்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் செய்து நியூசிலாந்து அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது.

- Advertisement -

நேற்று துவங்கிய முதல் டெஸ்ட் போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணி முதலில் பேட்டிங் செய்வது என தீர்மானித்தது. பங்களாதேஷ் அணியின் துவக்க ஆட்டக்காரர் ஹசன் ஜாய் மட்டும் நிலைத்து நின்று விளையாடி 87 ரன்கள் எடுத்தார்.

இதற்கு அடுத்து நஜிபுல் சாந்தோ மற்றும் மொமினுல் ஹக் இருவரும் தல 37 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்கள். பங்களாதேஷ் அணி 85.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் எழுந்து 310 ரன்கள் சேர்த்தது. நியூசிலாந்து தரப்பில் கிளன் பிலிப்ஸ் ஆச்சரியமாக நான்கு விக்கெடுகள் கைப்பற்றினார்.

இதற்கடுத்து விளையாடிய நியூசிலாந்து அணிக்கு மேல் வரிசையில் வீரர்கள் ஏமாற்ற கேன் வில்லியம்சன் வழக்கம்போல் நிலைத்து நின்று விளையாட ஆரம்பித்தார். அவருக்கு முதலில் டேரில் மிட்சல் ஒத்துழைப்பு தந்தார்.

- Advertisement -

ஆடுகளத்தின் தன்மை உணர்ந்து பொறுமையாக விளையாடிய வில்லியம்சன் அரை சதம் கடந்த. இதற்கு அடுத்து டேரில் மிட்சல் 41 ரன்கள் எடுத்து வெளியேறினார். அடுத்து வந்த கிளன் பிலிப்ஸ் ஓரளவுக்கு சிறப்பாக விளையாடி 42 ரன்கள் எடுத்தார்.

தொடர்ந்து சிறப்பாக களத்தில் நின்று விளையாடிய கேன் வில்லியம்சன் சதம் அடித்து அசத்தினார். அவருக்கு இது டெஸ்ட் கிரிக்கெட் 29ஆவது சதம். ஒட்டுமொத்தமாக அவருக்கு இது சர்வதேச கிரிக்கெட்டில் 42வது சதம்.

இதன் மூலம் நியூசிலாந்து டெஸ்ட் கிரிக்கெட்டில் 32 ஆண்டுகளுக்குப் பிறகு தொடர்ச்சியாக மூன்று சதங்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் அடித்த வீரர் என்ற மகத்தான சாதனையை வில்லியம்சன் படைத்திருக்கிறார். இறுதியாக 205 பந்துகளில் 104 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

நியூசிலாந்து அணி தற்போதைய நிலவரப்படி 83 ஓவர்களில் எட்டு விக்கெட் இழப்புக்கு 264 ரன்கள் எடுத்திருக்கிறது. பங்களாதேஷ் தரப்பில் சுழற் பந்துவீச்சாளர் தைய்ஜுல் இஸ்லாம் நான்கு விக்கெட் கைப்பற்றி இருக்கிறார்.