32 ஓவர்.. பங்களாதேஷை பந்தாடியது பாகிஸ்தான்.. நியூசிக்கு பெரிய சிக்கல்.. அரையிறுதியில் பாக்?.. புள்ளி பட்டியலில் பெரிய மாற்றங்கள்!

0
1008
Pakistan

இன்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில் பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிக்கொண்ட போட்டியில், பாகிஸ்தான் அணி அபாரமான முறையில் வெற்றி பெற்று இருக்கிறது.

இன்றைய போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணி முதலில் பேட்டிங் செய்வது என தீர்மானித்தது. பங்களாதேச அணிக்கு மகமதுல்லா 56, லிட்டன் தாஸ் 45, கேப்டன் ஷகிப் அல் ஹசன் 43, மெகதி ஹசன் மிராஸ் 25 ரன்கள் எடுக்க, 45.1 ஓவரில் 204 ரன்களுக்கு பங்களாதேஷ் அணி ஆல் அவுட் ஆனது.

- Advertisement -

பாகிஸ்தான் தரப்பில் ஷாகின் அப்ரிடி மற்றும் முகமது வாசிம் இருவரும் தலா மூன்று விக்கெட் கைப்பற்றினார்கள். ஹாரிஸ் ரவுப் இரண்டு விக்கெட் கைப்பற்றினார்.

இதற்கு அடுத்து இலக்கை நோக்கி களம் இறங்கிய பாகிஸ்தான் அணிக்கு துவக்க ஆட்டக்காரர்கள் அப்துல்லா ஷபிக் 68, பகார் ஜாமான் 81, பாபர் அசாம் 9 ரங்கல் எடுத்து ஆட்டம் இழந்தார்கள். முகமது ரிஸ்வான் 26, இப்திகார் அகமது 17 ரன்கள் என ஆட்டம் இழக்காமல் நின்று, 32.3 ஓவர்களில் பாகிஸ்தான் அணியின் வெற்றியை உறுதி செய்தார்கள்.

தற்போது ஏழாவது போட்டியில் விளையாடி உள்ள பாகிஸ்தான் அணிக்கு இது மூன்றாவது வெற்றியாகும். இந்த வெற்றியின் மூலம் 6 புள்ளிகள் உடன் ரன் ரேட் அடிப்படையில் பாகிஸ்தான் அணி ஐந்தாவது இடத்திற்கு புள்ளி பட்டியலில் பொன்னேரி இருக்கிறது.

- Advertisement -

பாகிஸ்தான் அணியின் இந்த வெற்றியை நியூசிலாந்து அணியின் அரை இறுதிக்கு சிறிது சிக்கலை உண்டாக்கி இருக்கிறது. நியூசிலாந்து அணி தனது அடுத்த மூன்று ஆட்டங்களை தென் ஆப்பிரிக்கா பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு எதிராக விளையாட இருக்கிறது.

இந்த மூன்று ஆட்டங்களில் குறைந்தபட்சம் ஒரு ஆட்டத்தை ஆவது நியூசிலாந்து அணி வெல்ல வேண்டும். அதே சமயத்தில் பாகிஸ்தான் அணி தனது கடைசி இரண்டு போட்டியில் நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிராக விளையாட இருக்கிறது.

நியூசிலாந்து தனது கடைசி மூன்று ஆட்டத்தில் ஒரு ஆட்டத்தை வென்று, பாகிஸ்தான் தனது கடைசி இரு ஆட்டத்தையும் வென்றால் இருவரும் 10 புள்ளிகள் உடன் இருப்பார்கள்.

அப்பொழுது ரன் ரேட் அடிப்படையில் யார் முன்னணி என்று முடிவாகும். ஒருவேளை நியூசிலாந்து மூன்று போட்டியிலும் தோற்று, பாகிஸ்தான் இரண்டு போட்டியிலும் வென்றால், பாகிஸ்தான் நியூசிலாந்துக்கு மேலாக முன்னேறி விடும். மேலும் அரையிறுதி வாய்ப்பும் 99 சதவீதம் இருக்கும்.

இந்த நிலையில் நாளை நியூசிலாந்து அணி தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக விளையாட இருக்கிறது. இந்தப் போட்டி நியூசிலாந்து அணிக்கு மிக முக்கியமான போட்டியாகும்.

ஒருவேளை இந்த போட்டியில் நியூசிலாந்து தோற்றால், அடுத்து பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடும் போட்டி வாழ்வா சாவா போட்டியாக மாறிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது உலகக்கோப்பை அதற்கே உரிய முறையில் சூடு பிடித்திருக்கிறது!