31 வருட சோகம்.. இந்தியாவை காப்பாற்றிய யான்சன் டோனி.. கோட்டை விட்ட தென் ஆப்பிரிக்கா!

0
1438
ICT

இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி செஞ்சுரியன் மைதானத்தில் தொடங்கியுள்ளது. கனமழை பெய்ததன் காரணமாக மைதானத்தில் அதிகளவு ஈரப்பதம் இருந்ததால், டாஸ் போடுவதற்கு தாமதம் ஏற்பட்டது. இதன்பின் 25 நிமிடங்கள் தாமதத்திற்கு பின் போடப்பட்ட டாஸில் தென்னாப்பிரிக்கா அணி வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதேபோல் டாஸிற்கு பின் இந்திய முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, பிட்சில் புற்கள் இருப்பதை பார்த்து ஏமாற வேண்டும். டாஸ் வென்றால் பேட்டிங் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தினார். இதனால் இந்திய அணி முதலில் பேட்டிங் ஆட களமிறங்கியது இந்திய அணி ரசிகர்களிடையே நம்பிக்கையை அதிகரித்தது.

- Advertisement -

இதன்பின் இந்திய அணியின் தொடக்க வீரர்களான ரோகித் சர்மா – யஷஸ்வி ஜெய்ஸ்வால் கூட்டணி களமிறங்கியது. ரபாடா வீசிய முதல் ஓவரிலேயே பவுண்டரி விளாசி ஜெய்ஸ்வால் ரன் கணக்கை தொடங்கினார். அதேபோல் ரோகித் சர்மாவும் பவுண்டரி அடித்து சிறப்பாக தொடங்க, ரபாடா வீசிய ஷார்ட் பாலில் ரோகித் சர்மா புல் ஷாட் அடிக்க முயன்று 5 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அதன்பின் மார்க்கோ யான்சனுக்கு சரியான லைன் மற்றும் லெந்த் கைகூடாததால், தென்னாப்பிரிக்கா அணி உடனடியாக அவருக்கு 3 ஓவர்களுடன் நிறுத்திவிட்டு உடனடியாக அறிமுகமான வீரரான பர்கரை அட்டாக்கில் கொண்டு வந்தது. இவர் ஜெய்ஸ்வால் கவர் திசையில் அடிப்பதை அறிந்து அங்கு ஒரு ஃபீல்டரை நிறுத்தி ஃபுல் லெந்தில் வீசினார்.

அந்த பந்தை பவுண்டரி அடிக்க முயன்று ஜெய்ஸ்வாலும் 17 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார். அதன்பின் விராட் கோலி – சுப்மன் கில் கூட்டணி களத்தில் இருந்தது. விராட் கோலி பவுன்ஸை எதிர்த்து விளையாட க்ரீஸிற்கு வெளியில் இருந்து ஆட தொடங்கினார். இந்த நிலையில் பர்கர் வீசிய சாதாரண பந்தில் சுப்மன் கில் கீப்பர் கேட்டாகி 2 ரன்னில் வெளியேறினார்.

- Advertisement -

இதனால் இந்திய அணி 23 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. தென்னாப்பிரிக்கா மண்ணில் ரோகித் சர்மா, சுப்மன் கில் மற்றும் ஜெய்ஸ்வால் ஆகிய 3 பேருமே பெரிதாக விளையாடி அனுபவமில்லாதவர்கள். இதனால் அனுபவமில்லாத டாப் ஆர்டரை கொண்டு இந்திய அணி களமிறங்கியுள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

முதல் செஷனிலேயே இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வரும் சூழலில், முதல் நாள் முழுவதும் இந்திய அணியால் சமாளிக்க முடியுமா என்ற கேள்வியும் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

மேலும் ஸ்ரேயாஸ் ஐயருக்கு யான்சன் மற்றும் விராட் கோலிக்கு டோனி டி சோர்சி கைக்கு வந்த எளிதான கேட்ச்சை தவற விட்டு இந்திய அணியை காப்பாற்றி இருக்கிறார்கள். முதல் சீசன் முடிவில் விராட் கோலி ஆட்டம் இழக்காமல் 33, ஸ்ரேயாஸ் ஐயர் 31 ரன்கள் எடுத்திருக்கிறார்கள். இந்திய அணி 26 ஓவர்களில் மூன்று விக்கெட் இழப்புக்கு 91 ரன்கள் சேர்த்து இருக்கிறது!