31ஓவர்.. நிமிர முடியாத இங்கிலாந்து… வெஸ்ட் இண்டீஸ் அபார வெற்றி.. தொடரை கைப்பற்றியது!

0
416
WI

இங்கிலாந்து அணி தற்போது வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் செய்து டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர்களில் விளையாடுகிறது.

இதில் முதலில் நடைபெறும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் இரண்டு அணிகளும் தலா ஒரு போட்டியை வென்று தொடர் சமனில் இருந்தது.

- Advertisement -

நேற்று இரவு தொடரை தீர்மானிக்கும் கடைசி மற்றும் மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பந்து வீசுவது என முடிவு செய்தது. மழையின் காரணமாக 40 ஓவர்கள் கொண்ட போட்டியாக நடத்தப்பட்டது.

இங்கிலாந்து அணியில் பென் டக்கெட் 71, லியாம் லிவிங்ஸ்டன் 45 என நல்ல ரன் பங்களிப்பு கொடுத்தார்கள். மற்ற எந்த வீரர்களும் சரியான ரன் பங்களிப்பை தரவில்லை. கேப்டன் ஜோஸ் பட்லர் சந்தித்த முதல் பந்திலேயே கோல்டன் டக் அடித்து வெளியேறினார். 40 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 209 ரன்கள் எடுத்தது.

வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் மேத்யூ போர்ட் மற்றும் அல்சாரி ஜோசப் இருவரும் தலா மூன்று விக்கெட்டுகள் கைப்பற்றினார்கள். ரொமாரியோ ஷெப்பர்ட் இரண்டு விக்கெட் வீழ்த்தினார்.

- Advertisement -

இதற்கு அடுத்து 34 ஓவர்களில் 188 ரன்கள் என்று இலக்கு கொடுக்கப்பட்டது. அதை நோக்கி விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு இளம் துவக்க ஆட்டக்காரர் அலிக் ஆதனஸ் 45, கேசி கார்தி 50, ரோமாரியோ ஷெப்பர்ட் 41* ரன்கள் எடுக்க, 31.4 ஓவரில் ஆறு விக்கெட் இழப்புக்கு வெஸ்ட் இண்டீஸ் 191 ரன்கள் எடுத்து அசத்தலாக வெற்றி பெற்றது.

வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டுக்கு ஒன்று என ஒருநாள் கிரிக்கெட் தொடரை இங்கிலாந்துக்கு எதிராகக் கைப்பற்றியது. ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பையில் அரையிறுதிக்கு தகுதி பெற முடியாமல் வெளியேறிய இங்கிலாந்து, தற்பொழுது வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் ஒருநாள் கிரிக்கெட் தொடரையும் இழந்திருக்கிறது. இங்கிலாந்து அணியால் இந்த வடிவ கிரிக்கெட்டில் நிமிர முடியாமல் இருந்து வருகிறது!