“2 ரன்னுக்கு 3 விக்கெட்.. நேர்மையா சொல்றேன் ரொம்ப பதட்டமாயிடுச்சு!” – ரோகித் சர்மா வெளிப்படையான பேச்சு!

0
5051
Rohit

இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்திய ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டி, மிகவும் பரபரப்பான ஒன்றாக அமைந்திருக்கிறது.

இந்தப் போட்டியில் இந்திய அணி பந்துவீச்சில் மிகச் சிறப்பாக ஆரம்பித்தது. அதேபோல் ஃபீல்டிங்க்கும் எப்போதும் இல்லாத அளவுக்கு மிகச் சிறப்பாக அமைந்திருந்தது. ஆஸ்திரேலியா அணி 199 ரன்களுக்கு சுருண்டது.

- Advertisement -

ஆனால் அடுத்த பேட்டிங் செய்ய வந்த இந்திய அணி இரண்டு ரன்கள் எடுத்திருந்த பொழுது மூன்று விக்கெட்டுகளை இழந்து இருந்தது. அணியின் டாப் ஆர்டர்கள் கேப்டன் ரோஹித் சர்மா, கில் இடத்தில் வந்த இஷான் கிஷான் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் மூவரும் ரன் இல்லாமல் வெளியேறி அதிர்ச்சி கொடுத்தார்கள்.

இந்த நிலையில் அடுத்து வந்த விராட் கோலி மற்றும் கேஎல்.ராகுல் இருவரும் இணைந்து 165 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்திய அணி வெல்வதற்கு மிக முக்கிய காரணமாக இருந்தார்கள். இந்த ஜோடி விளையாடி இருக்காவிட்டால் இந்திய அணி இந்த போட்டியில் தோற்று இருக்கும்.

இந்த நிலையில் போட்டியின் முடிவுக்கு பின் பேசிய இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா “டாப்பில் வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. பந்துவீச்சு மற்றும் ஃபீல்டிங் மிகச் சிறப்பாக இருந்தது. பீல்டிங்கில் முன்னேற்றம் காண நாங்கள் உழைப்போம்.இது ஒரு சிறந்த முயற்சி. இது போன்ற சூழ்நிலையில் கடினம். இங்கு அனைவருக்குமே உதவி இருக்கும் என்று தெரியும்.

- Advertisement -

வேகப்பந்துவீச்சாளர்களுக்கு ரிவர்ஸ் ஸ்விங் கிடைத்தது. ஸ்பின்னர்களுக்கும் நல்ல உதவி இருந்தது. ஸ்பின்னர்கள் நல்ல ஏரியாவில் பந்து வீசினார்கள். எல்லாவற்றிலும் சிறந்த முயற்சியை வெளிப்படுத்தினோம்.

நேர்மையாக சொல்வது என்றால் இரண்டு ரன்களுக்கு மூன்று விக்கெட் எனும் பொழுது பதட்டம் உண்டாகிவிட்டது. இலக்கைத் துரத்தும் பொழுது யாரும் இப்படி துவங்க விரும்ப மாட்டார்கள். இதற்கு ஆஸ்திரேலியாவிற்கு கிரெடிட் கொடுக்க வேண்டும்.

விராட் கோலி மற்றும் கேஎல்.ராகுலுக்கு பாராட்டுக்கள். அவர்கள் மேட்ச் வின்னிங் பார்ட்னர்ஷிப்பை உருவாக்கினார்கள். அடுத்தடுத்த போட்டிகளில் வித்தியாசமான சூழ்நிலைகளில் விளையாடுவது எப்பொழுதும் சவாலான ஒன்றாக இருக்கும்.

இதற்கு தகுந்தார் போல் விளையாடும் அணியையும் மாற்ற வேண்டியதாக இருக்கும். நாங்கள் இதற்கெல்லாம் தயாராக இருக்கிறோம். சென்னை ஒருபொழுதும் ஏமாற்றம் அடைய வைக்காது. மக்கள் கூட்டம் புத்திசாலித்தனமாக இருந்தது. அவர்கள் வெயிலில் அமர்ந்து எங்களுக்கு ஆரவாரம் செய்தது நிறைய விஷயங்களை உணர்த்தியது!” என்று கூறி இருக்கிறார்!