ஐபிஎல் 2024-ல் பாகிஸ்தான் வீரர் முகமது அமீரை வாங்க வாய்ப்புள்ள 3 அணிகள்

0
15112

பாகிஸ்தான் அணியின் முன்னணி வேகம் பந்துவீச்சாளராக விளங்கியவர் முஹம்மது அமீர். அந்த அணியின் அடுத்த வாசிம் அக்ரம் என்று ரசிகர்களால் கொண்டாடப்பட்ட நிலையில் சூதாட்டப் புகார்களில் சிக்கி அதிலிருந்து மீண்டு வந்து பின்னர் அந்த நாட்டு கிரிக்கெட் வாரியத்துடன் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து 2020 ஆம் ஆண்டு அனைத்து வடிவ கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்றார் .

தற்போது உலகெங்கிலும் நடைபெற்று வரும் டி20 மற்றும் டீ 10 கிரிக்கெட் லீக் போட்டிகளில் விளையாடி வருகிறார் முகமது அமீர் . இந்நிலையில் முகமது அமீர் பாகிஸ்தான் நாட்டில் இருந்து வெளியேற இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. பாகிஸ்தான் நாட்டை விட்டு வெளியேறி இங்கிலாந்தில் குடிகார இருப்பதாகவும் அதற்காக அவருக்கான குடியுரிமை இன்னும் சில மாதங்களில் தயாராகிவிடும் எனவும் அந்த செய்திகள் தெரிவிக்கின்றன .

- Advertisement -

முகமது அமீர் இங்கிலாந்து குடிமகனான பிறகு அவரால் ஐபிஎல் போட்டிகளில் பங்கு பெற முடியும் . முன்னாள் பாகிஸ்தான் அணியின் வீரரான அசார் மஃமுத் இங்கிலாந்து குடியுரிமையை பெற்று கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக ஐபிஎல் போட்டிகளில் விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது . தற்போது முகமது அமீரும் இங்கிலாந்து நாட்டு குடியுரிமையைப் பெற்றால் அவராலும் ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்க முடியும். அப்படி முகமது அமீர் ஐபிஎல் ஏலத்தில் பங்கு பெற்றால் அவரை எந்த ஐபிஎல் அணிகள் வாங்க வாய்ப்பிருக்கிறது என்று பார்ப்போம்.

மும்பை இந்தியன்ஸ்:
மும்பை இந்தியன்ஸ் அணி ஒரு தரமான இடது கை பந்துவீச்சாளர் இல்லாமல் பவர் பிளே ஓவர்களில் தடுமாறி வருகிறது. ட்ரெண்ட் போல்ட் அந்த அணியில் இருந்து வெளியேறிய பிறகு அவரது இடத்தை வேறு எந்த பந்துவீச்சாளர்களாலும் நிரப்ப முடியவில்லை. ஒருவேளை மும்பை அணி முகமது அமீரை எடுக்கும் பட்சத்தில் அவரது அனுபவம் மற்றும் புதிய பந்தில் விக்கெட் எடுக்கும் திறமை மும்பை அணிக்கு சாதகமாக அமையும். இதனால் மும்பை அணி நிச்சயமாக வர இயலத்தில் எடுக்க முயற்சி செய்யும் .

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் :
மும்பை அணியை போலவே கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் துவக்க ஓவர்களில் பந்து வீசுவதற்கு ஒரு திறமையான வேகம் வந்து வீச்சாளர் இல்லாமல் தடுமாறியது . அடுத்த வருடம் ஸ்ரேயாஸ் ஐயர் மீண்டும் அணிக்கு திரும்பும் போது நிச்சயமாக ஒரு வெளிநாட்டு வேகப்பந்துவீச்சாளரை வாங்க முயற்சிப்பார்கள் . முகமது அமீர் ஏலத்தில் இருந்தால் கண்டிப்பாக அவரை வாங்குவதற்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி போட்டி போடும் என்பதில் சந்தேகம் இல்லை.

- Advertisement -

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்:
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி முகமது அமீரை வாங்க கண்டிப்பாக முயற்சிக்கும் . அந்த அணி நடந்து முடிந்த ஐபிஎல் போட்டியில் டேவிட் வில்லி மற்றும் பர்ணெல் ஆகியோரை பந்துவீச்சில் முயற்சி செய்து பார்த்தது . ஆனால் இருவரும் தொடர்ச்சியாக நல்ல பெர்ஃபார்மன்ஸ் கொடுக்க தவறிவிட்டனர் . இந்நிலையில் முகமது சிராஜிக்கு ஜோடியாக துவக்கப் ஓவர்களில் பந்து வீச ஆர்சிபி அணி முகமது அமீரை தேர்வு செய்யலாம்.