பிரியாவிடை.. 2023 உலகக்கோப்பை முடிந்ததும் ஓய்வு பெறும் 3 நட்சத்திர வீரர்கள்.!

0
20461

இந்தியாவில் நடைபெற்று வரும் 13ஆவது ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இன்று இந்தியா நெதர்லாந்து அணிகள் மோதிக் கொள்ளும் போட்டி லீக் சுற்றின் கடைசி போட்டியாக அமைகிறது.

இந்த உலகக் கோப்பை தொடரில் அரைஇறுதிக்கு இந்தியா தென்னாப்பிரிக்கா ஆஸ்திரேலியா நியூசிலாந்து என நான்கு அணிகள் தகுதி பெற்று இருக்கின்றன.

- Advertisement -

இந்தியா நியூசிலாந்து அணிகள் முதல் அரைஇறுதி போட்டியில் மும்பை மைதானத்தில் நவம்பர் 15ஆம் தேதி விளையாடுகின்றன. இரண்டாவது அரை இறுதி போட்டியில் தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் கொல்கத்தா மைதானத்தில் விளையாடுகின்றன.

நடப்பு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரோடு ஒருநாள் கிரிக்கெட்டிலும் மற்றும் சர்வதேச கிரிக்கெட்டிலும் இருந்து மூன்று வீரர்கள் ஓய்வு பெறுகிறார்கள். அவர்கள் குறித்து இந்த சிறிய கட்டுரை தொகுப்பில் பார்ப்போம்.

நவீன் உல் ஹக் :
ஆப்கானிஸ்தானின் வலதுகை வேகப்பந்துவீச்சாளரான இவரது ஓய்வுதான் பெரிய அதிர்வை உண்டாக்கி இருக்கிறது. இவர் நடப்பு ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடருடன் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார். இவரது ஓய்வு அறிவிப்பு அதிர்வை ஏற்படுத்தியதற்கான காரணம் இவரது வயது 24தான். 15 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 22 விக்கெட்டுகள் வீழ்த்தி இருக்கிறார்.

- Advertisement -

டேவிட் வில்லி:
இங்கிலாந்து வலதுகை வேகப் பந்துவீச்சாளரான 34 வயதான இவர் நடப்பு ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருடன் ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார். நேற்று அவருக்கு கடைசி போட்டி பாகிஸ்தானுக்கு எதிராக அமைந்தது. இந்த போட்டியில் மூன்று விக்கெட்டுகள் கைப்பற்றி ஒரு நாள் கிரிக்கெட்டில் 73 போட்டிகளில் 100 விக்கெட்டுகள் வீழ்த்தியவராக விடைபெறுகிறார்.

குயின்டன் டி காக் :
30 வயதான தென் ஆப்பிரிக்க விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் குயின்டன் டி காக் நடப்பு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருடன் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறார். 154 ஒருநாள் போட்டிகளில் 6767 ரன்கள், 21 சதங்கள் மற்றும் 30 அரை சதங்கள் எடுத்திருக்கிறார். ஏற்கனவே இவர் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று விட்டார். டி20 கிரிக்கெட்டில் மட்டுமே இவர் தொடர்கிறார்.