ரவி பிஸ்னாய் ஏன் உலகக்கோப்பை அணியில் இருந்திருக்க வேண்டும்? – 3 முக்கிய காரணங்கள்!

0
258

இளம் சுழல் பந்துவீச்சாளர் ரவி பிஸ்னாய் டி20 உலக கோப்பை அணியில் ஏன் எடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்கிற மூன்று முக்கிய காரணங்களை நாம் இங்கு காண்போம்.

டி20 உலக கோப்பை தொடர் இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெறவிருக்கிறது. அக்டோபர் 16ஆம் தேதி துவங்கி நவம்பர் மாதம் இரண்டாம் வாரம் வரை நடைபெறும். இந்த தொடரில் பங்கேற்பதற்கான இந்திய அணி கடந்த செப்டம்பர் 12ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. உலககோப்பைக்கு செல்லும் இந்திய அணி அறிவிக்கப்பட்ட நாள் முதல் பல்வேறு விமர்சனங்களையும் கருத்துக்களையும் சந்தித்து வருகிறது. கிட்டத்தட்ட எதிர்பார்த்த வீரர்கள் அனைவரும் இடம்பெற்றிருந்தனர். ஆனால் சர்ச்சை முழுவதும் பந்துவீச்சு குறித்து இருந்தது. ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி இறுதி போட்டி வரை செல்ல முடியாமல் பாதியிலேயே வெளியேறியதற்கு முழு முக்கிய காரணமாக பார்க்கப்படுவது பந்துவீச்சு மட்டுமே.

- Advertisement -

வேகப்பந்து வீச்சில் முகமது சமி, தீபக்சகர் ஆகியோர் மிகச் சிறந்த பார்மில் இருக்கின்றனர். அவர்களை ஏன் அணியில் எடுக்கவில்லை என்ற கருத்துக்கள் நிலவி வந்தன. அதே நேரம் ஜடேஜா காயம் காரணமாக வெளியேறியதால் அவருக்கு பதிலாக ரவி பிஸ்னாய் உள்ளே எடுத்து வரப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ரவீந்திர ஜடேஜா போலவே செயல்படும் அக்சர் பட்டேல் உள்ள எடுத்துவரப்பட்டிருக்கிறார். இதுவும் தற்போது சர்ச்சையாக எழுந்துள்ளது. ஏனெனில் ரவி பிஸ்னாய் சமீப காலமாக இந்திய அணியில் இடம் பெற்று மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். ஆனால் அக்சர் பட்டேல் டி20 போட்டிகளில் பொதிய அளவிற்கு இடம்பெற்று விளையாடவில்லை. ஐபிஎல் போட்டிகளிலும் எதிர்பார்த்த அளவுக்கு செயல்படவில்லை என்பதால் இத்தகைய சர்ச்சை நிறுவியிருக்கிறது. இதற்கிடையில் ஏன் ரவி பிஸ்னாய் உள்ளே எடுத்து எடுத்து வரப்பட்டிருக்க வேண்டும் என்பதற்கான மூன்று முக்கிய காரணங்களை நாம் இந்த கட்டுரையில் காண்போம்.

1. வேகமாக வீசக்கூடியவர்

தற்போது அணியில் உள்ள சுழல் பந்துவீச்சாளர்களில் மிக வேகமாக வீசக்கூடியவர் ரவி பிஸ்னாய். அஸ்வின் மற்றும் சகல் இருவரும் மிதமான வேகத்தில் பந்தை அதிகளவு சுழற்சியில் வீசக்கூடியவர்கள். ஆஸ்திரேலியா மைதானத்தில் சுழல் பந்துவீச்சு பெரிதளவில் எடுபடாது என்பதால் சற்று வேகமாக பந்துவீசுவது அவசியம். அந்த வகையில் ரவி பிஸ்னாய் சரியான தேர்வாக இருந்திருப்பார். 10 டி20 போட்டிகளில் 16 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

- Advertisement -

2. பந்துவீச்சில் வேரியேஷன் காட்டக்கூடியவர்

யுஷ்வேந்திர சஹல் நிறைய லெக்-ஸ்பின் வீசக் கூடியவர். ரவிச்சந்திரன் அஸ்வின் திறமையான ஆப்-ஸ்பின் பவுலர். அக்சர் பட்டேல் இடதுகை சுழல் பந்துவீச்சாளர். ஆனால் ஆனால் ரவி பிஸ்னாய் பந்துவீச்சில் வேரியேஷன் காட்டக்கூடியவர். விக்கெட் டூ விக்கெட் நெருக்கமாக பந்துவீசக்கூடியவர். வேகத்தில் ஏற்றம் இறக்கம் காண்பித்து திணறடிக்கக்கூடியவர். மற்ற இருவரையும் விட இவர் பந்துவீச்சில் பல்வேறு கோணங்களை காட்டக் கூடியவர் என்பதால் இவர் நிச்சயம் அணியில் எடுக்கப்பட்டு இருக்க வேண்டும். ஆஸ்திரேலியா போன்ற மைதானங்களில் இது மிகப் பெரிய உதவியாகவும் இருக்கும்.

3. கணிக்க முடியாத சுழல் பந்துவீச்சாளர்

ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் சகல் இருவரும் பல ஆண்டுகளாக விளையாடுவதால் இவர்களின் பலம் மற்றும் பலவீனம் சர்வதேச அணிகளுக்கு ஏற்கனவே தெரிந்திருக்கும். எந்த நேரத்தில் எப்படியான பந்து வீசுவார்கள் என்று நிச்சயம் கணித்து வைத்திருப்பர். ஆனால் ரவி பிஸ்னாய் இன்னும் சர்வதேச போட்டிகளில் போதிய அளவிற்கு விளையாடவில்லை. ஆகையால் இவரது பந்துவீச்சை இன்னும் பெரிதளவில் கணித்திருக்க மாட்டார்கள். குறிப்பாக சுழல் பந்துவீச்சுக்கு பலவீனமாக இருக்கும் வீரர்கள் இவரது பந்துவீச்சை எதிர்கொள்வதற்கு மிகவும் திணறுவார்கள். மிடில் ஓவர்களில் பலவிதமாகவும் இவர் இந்திய அணிக்கு பயன்படுவார்.