இந்திய டெஸ்ட் அணிக்கு ரோஹித் சர்மாவுக்கு பதில் கேப்டனாக வர வாய்ப்புள்ள 3 வீரர்கள்!

0
21935
Rohitsharma

சில ஆண்டுகளுக்கு முன்பு இந்திய கிரிக்கெட் அணிக்கு மூன்று வடிவத்திலும் விராட் கோலி கேப்டனாக தொடர்ந்தார். இவருக்கு நெருக்கமான பயிற்சியாளராக ரவி சாஸ்திரி இருந்தார்!

இவர்களுடைய வெள்ளைப்பந்து கிரிக்கெட் அணுகுமுறை சரியாக இல்லை என்ற காரணங்கள் முன்வைக்கப்பட்டது. குறிப்பாக பல வருடங்களாக பேட்டிங்கில் நான்காம் இடத்திற்கு வீரரை கண்டறியவில்லை, பகுதி நேர பந்துவீச்சாளர்கள் இல்லை என்று காரணம் கூறப்பட்டது.

- Advertisement -

இந்த நிலையில் விராட் கோலி முழுதாக இந்திய அணிக்கான கேப்டன் பொறுப்பில் இருந்து நகர்ந்து கொள்ள, இவரது இடத்தில் ரோகித் சர்மாவும் ரவி சாஸ்திரி இடத்தில் ராகுல் டிராவிட்டும் வந்தார்கள்.

தற்பொழுது இவர்களுடைய திட்டமும் குறிப்பாக ரோகித் சர்மாவின் கேப்டன்சியும் மிகவும் மோசமாக இருப்பதாக இந்திய ரசிகர்கள் வரை கருதுகிறார்கள். நடந்து முடிந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி ஒட்டுமொத்தமாக இந்திய தரப்பை மிகுந்த ஏமாற்றத்திற்கு உள்ளாக்கி இருக்கிறது. இதையடுத்து இந்தியா டெஸ்ட் அணிக்கு ரோகித் சர்மாவிற்கு பிறகு கேப்டனாக வரக்கூடிய வாய்ப்பு இருக்கின்ற மூன்று வீரர்கள் பற்றி இந்தக் கட்டுரையில் பார்ப்போம்.

அஷ்வின்

- Advertisement -

இவர்தான் இன்று உலக டெஸ்ட் கிரிக்கெட் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் பந்துவீச்சாளர். மேலும் இன்றைய கிரிக்கெட் உலகில் ஆப் ஸ்பின் பந்துவீச்சில் முழுமையான ஒரு பந்துவீச்சாளர்.

தற்பொழுது இவர் டெஸ்ட் கிரிக்கெட் வடிவத்தில் மட்டுமே விளையாடக்கூடிய நிலையில் இருக்கிறார். மேலும் இவரால் உலகின் எந்த நாட்டிலும் பந்து வீச முடியும். இந்திய அணிக்காக எல்லா டெஸ்ட் போட்டிகளிலும் விளையாட முடியும். மிகக்குறிப்பாக அனுபவம் வாய்ந்தவர். எனவே இவரை அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் ஓட்டத்தில் கேப்டனாக பயன்படுத்தலாம்.

ரிஷப் பண்ட்

அதிரடியான வீரராக இருந்தாலும், இவரது பேட்டிங் டெஸ்ட் கிரிக்கெட் வடிவத்தில் மிகவும் வீரியமிக்கதாக இருக்கிறது. இந்திய அணி பங்கேற்கும் எல்லா டெஸ்ட் ஆட்டங்களிலும் இவருக்கு கண்டிப்பாக இடம் உண்டு.

ஒரு அணியின் விக்கெட் கீப்பர் பாதி கேப்டனுக்கு சமம் என்று சொல்வார்கள். இவர் அணிக்குள் வந்து தேவையான அளவுக்கு அனுபவத்தையும் பெற்று இருக்கிறார். மேலும் இளம் வீரராகவும் இருக்கிறார். எனவே எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, நீண்ட காலத்திற்கான கேப்டனாக இவரைக் கொண்டு வரலாம்.

சுப்மன் கில்

இந்திய அணியின் அடுத்த பத்து வருடத்திற்கான வீரராக இவர் பார்க்கப்படுகிறார். இளம் வீரரான இவர் இந்திய கிரிக்கெட்டின் மூன்று வடிவங்களிலும் தொடர்ந்து விளையாட இருக்கின்ற வீரர்.

இந்திய கிரிக்கெட் நிர்வாகம் அதிரடியான முடிவில் இறங்கி எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தற்பொழுது ரிஷப் பண்ட்டும் இல்லாததால், இவரை கேப்டனாக கொண்டு வர முடியும். இவருக்கு பக்கபலமாக அணியின் மூத்த வீரர்கள் இருப்பார்கள். இவர்களைப் பயன்படுத்திக் கொள்ள இந்த முடிவை எடுக்கலாம்!