ஐபிஎல் விட எங்க நாடு தான் முக்கியம்; கேகேஆர் அணியிருந்து மூன்று முக்கிய வீரர்கள் விலகல்!

0
4256

சொந்தக் காரணங்களுக்காக கேகேஆர் அணியிலிருந்து மூன்று முக்கிய வீரர்கள் விலகி இருப்பதாக அறிவிப்புகள் வெளியாகி உள்ளது.

2023 ஆம் ஆண்டு ஐ பி எல் தொடருக்கான ஏலம் வருகிற டிசம்பர் மாதம் நடைபெறுகிறது. இந்த ஏலத்தில் பங்கேற்பதற்கு முன்னர் ஒவ்வொரு அணியும் தங்களது அணியின் வீரர்களில் யாரை தக்க வைக்க வேண்டும்? யாரை வெளியேற்ற வேண்டும்? என முடிவு செய்து அதற்கான இறுதிப் பட்டியலை நவம்பர் 15ஆம் தேதி மாலை கொல் ஐபிஎல் நிர்வாகத்திலும் சமர்ப்பிக்க வேண்டும்.

தற்போது இதற்கான கால அவகாசம் முடிவடைந்து இருக்கிறது. ஒவ்வொரு அணியும் ஒன்றன்பின் மற்றொன்றாக பட்டியலை வெளியிட்டு வருகிறது.

வீரர்களை தக்க வைக்கும் பட்டியலை வெளியிடுவதற்கு முன்பாக கொல்கத்தா அணி தங்களது அணியின் மூன்று வீரர்கள் சர்வதேச போட்டிகள் மற்றும் சொந்த காரணங்களுக்காக 2023 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் பங்கேற்க மாட்டார்கள் என அறிவித்திருக்கிறது.

அதில் இரண்டு இங்கிலாந்து வீரர்கள் இருக்கின்றனர். உலககோப்பை வென்ற இங்கிலாந்து அணியின் துவக்க வீரர் அலெக்ஸ் ஹெல்ஸ் மற்றும் இங்கிலாந்தின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் சாம் பில்லிங்ஸ் இருவரும் இருக்கின்றனர்.

ஆஷஷ் தொடரில் பங்கேற்க பயிற்சியை மேற்கொள்ள வேண்டும் என்பதற்காக அடுத்த வருடம் ஐபிஎல் தொடரில் பங்கேற்க மாட்டேன் என ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் விலகியுள்ளார் .