3 புதிய கேப்டன்கள்.. பிசிசிஐ மாஸ்டர் பிளான்.. விராட் கோலிக்கு தொடரும் சோகம்!

0
500
Virat

பொதுவாக கிரிக்கெட் தற்காலத்தில் மிக வேகமாக மாற்றம் அடைந்து வருகிறது. டி20 கிரிக்கெட்டின் வருகை கிரிக்கெட்டுக்குள் நிறைய மாற்றங்களை உருவாக்குகிறது.

இது ஒவ்வொரு கிரிக்கெட் வடிவத்தையும் எப்படி அணுகுகிறோம் என்பதில் பல்வேறு வகையான மாற்றங்களை உள்ளே கொண்டு வந்திருக்கிறது.

- Advertisement -

இங்கிலாந்து அணி தற்பொழுது ஒவ்வொரு கிரிக்கெட் வடிவத்திற்கும் ஒரு அணியை தயார் செய்வதில் ஏறக்குறைய வெற்றி பெற்று இருக்கிறது. பெரிய அணிகளுக்கு நிறைய போட்டிகள் இருக்கின்ற காரணத்தினால், ஒவ்வொரு வடிவத்திற்கும் ஒரு தனி அணி தேவைப்படுகிறது. அப்பொழுதுதான் வீரர்களின் பணிச்சுமையை நிர்வகிக்க முடியும்.

இந்த வகையில் இந்திய கிரிக்கெட் நிர்வாகம் கொஞ்சம் தாமதமாக இந்த செயல்பாட்டுக்குள் வந்திருக்கிறது. ஆனால் வெகு சீக்கிரத்தில் இந்தியாவில் அதிக வீரர்கள் கிடைக்கின்ற காரணத்தினால் தனி அணிகளை உருவாக்குவதில் இந்திய கிரிக்கெட் நிர்வாகம் முன்னேறி சென்று இருக்கிறது.

ஒவ்வொரு வடிவத்திற்கும் தனி அணிகளை உருவாக்குவதால் தனித்தனி கேப்டன்களையும் உருவாக்க வேண்டிய தேவை உருவாகி இருக்கிறது. இந்திய கிரிக்கெட் நிர்வாகம் எப்பொழுதும் மூன்று வடிவத்திற்கும் ஒரே கேப்டனை விரும்பக் கூடிய நிர்வாகமாக இருந்தது. விராட் கோலி இந்த காரணத்தினால்தான், டி20 கிரிக்கெட் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகியதும் ஒரு நாள் கிரிக்கெட் கேப்டன் பொறுப்பில் இருந்தும் நீக்கப்பட்டார்.

- Advertisement -

ஆனால் தற்போது நிலைமைகள் மாறி இருக்கின்ற காரணத்தினால் இந்திய கிரிக்கெட் நிர்வாகத்தின் திட்டங்களும் மாறியிருக்கிறது. இதன் காரணமாக எதிர்காலத்தில் ஒருநாள் கிரிக்கெட் மற்றும் டெஸ்ட் என இரு வடிவத்திற்கும் கேஎல் ராகுலை குறைந்த காலத்திற்கு கேப்டனாக கொண்டுவர பிசிசிஐ திட்டமிடுகிறது.

டி20 கிரிக்கெட் பொறுத்தவரை ஹர்திக் பாண்டியாவை முழு நேர கேப்டனாக வைப்பதில் இந்திய கிரிக்கெட் நிர்வாகத்திற்கு பெரிய உடன்பாடு இல்லை. இந்த இடத்தில் ரிஷப் பந்த் திரும்ப வந்து எப்படி செயல்படுகிறார் என்பதை பொறுத்து ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்சி ஆயுட்காலம் நீடிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போதுள்ள நிலவரப்படி ரிஷப் பந்த் வந்ததும், அவர் விக்கெட் கீப்பர் என்கின்ற காரணத்தினால் முதலில் இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு கேப்டனாக மாற்றப்படுவார் என்றும், ஒருநாள் கிரிக்கெட் வடிவத்திற்கு கேஎல் ராகுலும், ரிஷப் பந்த் விளையாடுவதைப் பொறுத்து டி20 அணிக்கு ஹர்திக் பாண்டியா கேப்டன் ஆகவும் இருப்பார்கள் என்று தெரிகிறது.

விராட் கோலி விஷயத்தில் பிசிசிஐ கொஞ்சம் பொறுமை காட்டி இருந்தால், நடந்து முடிந்த ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் விராட் கோலி இந்திய அணியை கேப்டனாக வழி நடத்தி இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அவரை பிசிசிஐ நிர்வாகம் கேப்டன் விஷயத்தில் பழிவாங்கி இருக்கிறது!