வெ.இ ஓடிஐ தொடரில் சொதப்பினால் உலகக்கோப்பை வாய்ப்பை இழக்க போகும் 3 இந்திய நட்சத்திர வீரர்கள்!

0
969
Odiwc2023

மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய வெஸ்ட் இண்டீஸ் அணிகள் விளையாட இருக்கின்றன. இந்தத் தொடருக்கான முதல் போட்டி இன்று துவங்குகிறது. இந்திய நேரப்படி இந்த போட்டியை இரவு 7 மணியிலிருந்து பார்க்கலாம்.

இந்த ஆண்டு இந்தியாவில் வருகின்ற அக்டோபர் நவம்பர் மாதங்களில் ஒரு நாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடர் நடக்க இருக்கிறது. இதற்கான தயாரிப்புகளில் இந்திய அணிநிர்வாகம் ஈடுபட்டு உள்ளது. தேவையான கதாபாத்திரங்களுக்கு பொருந்தக்கூடிய வீரர்களை கண்டறிய வேண்டிய கடைசி கட்டத்தில் வேலைகள் நடைபெற்று வருகிறது.

- Advertisement -

இந்திய அணியில் விபத்தில் சிக்கிய ரிஷப் பண்ட் மற்றும் காயத்திற்கு அறுவை சிகிச்சை செய்து ஓய்வில் இருக்கும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் வருகின்ற உலகக் கோப்பைக்கு இந்திய அணிக்கு கிடைக்க மாட்டார்கள் என்பதால், இவர்கள் இந்திய அணியில் ஏற்றிருந்த பாத்திரங்களுக்கு சரியான வீரர்கள் யார் என்று பார்ப்பதற்கு நடைபெற இருக்கும் வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் கிரிக்கெட் தொடர் முக்கியமானதாக இருக்கிறது.

தற்போது இந்திய அணி நிர்வாகம் இசான் கிஷான் மற்றும் சஞ்சு சாம்சன் இருவரில் யாரை இரண்டாவது விக்கெட் கீப்பராக அணியில் சேர்ப்பது என்றும், அதே சமயத்தில் ஸ்ரேயாஸ் ஐயர் இடத்தில் யாரை வைப்பது? என்றும் தேடலில் ஈடுபட்டு இருக்கிறது. தற்பொழுது இந்த இடத்திற்கு மூன்று வீரர்கள் போட்டியிட்டு வருகிறார்கள். அவர்கள் யார் என்று பார்ப்போம்.

இசான் கிஷான் :

- Advertisement -

கே எல் ராகுல் இந்திய அணிக்கு உலக கோப்பைக்கு முன்பாக திரும்புவது உறுதியாகி இருக்கிறது. எனவே அவர்தான் இந்திய அணியின் முதல் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் ஆக இருப்பார். எனவே இஷான் கிஷான் இரண்டாவது விக்கெட் கீப்பருக்கான இடத்தில், மாற்று இடது கை துவக்க ஆட்டக்காரராகவும் இருப்பார். இவருக்கு வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் இவர் சிறப்பாக செயல்பட வேண்டியது முக்கியமானது.

சஞ்சு சாம்சன் :

சஞ்சு சாம்சன் வலது கை இரண்டாவது விக்கெட் கீப்பர் இடத்திற்கும், பேட்டிங் வரிசையில் மாற்று மிடில் ஆட பேட்ஸ்மேனுக்கான இடத்திற்கும் போட்டியிட்டு வருகிறார். இவரை சமீபத்தில் இந்திய கிரிக்கெட் வாரியம் சம்பள பிரிவில் தேர்ந்தெடுத்து இருந்தது. எனவே நடப்பு வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இவருக்கு வாய்ப்பு கிடைப்பது ஏறக்குறைய உறுதி. எனவே இவர் சிறப்பாக செயல்பட்டாக வேண்டும்.

சூரியகுமார் யாதவ் :

சூரியகுமார் யாதவுக்கு உலகக்கோப்பையில் 15 பேர் கொண்ட இந்திய அணியிலும், 11 பேர் கொண்ட விளையாடும் அணிகளும் வாய்ப்புகள் கிடைக்கலாம். இதற்கு அவர் சிறப்பாக வெஸ்ட் இண்டீஸ் தொடரில் விளையாட வேண்டியது அவசியம். இவர் லோயர் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஆக இருப்பார், இல்லை மிடில் ஆர்டர் மாற்று பேட்ஸ்மேன் ஆகவும் இருப்பார்.

இவர்கள் மூன்று பேருக்கும் கிடைக்கும் வாய்ப்புகள் இவர்கள் சரியாக செயல்படாவிட்டால், இவர்களது வாய்ப்பு இன்னொருவருக்கு செல்வதற்கு தான் அதிக வாய்ப்புகள் இருக்கிறது. இந்த மூவரில் இருவருக்கு உலகக் கோப்பை அணியில் இடம் உண்டு. வாய்ப்பை இழக்க அந்த ஒருவர் யார் என்பதை முடிவு செய்யத்தான் தற்பொழுது சோதனைகள் நடைபெற்று வருகிறது!