இந்திய டி20 அணியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு புறக்கணிக்கப்பட்ட 3 வீரர்கள்!

0
3209
Rinkusingh

வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணி மூன்று வடிவிலான கிரிக்கெட் தொடர்களிலும் விளையாட இருக்கிறது. இதில் முதலில் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நடக்கிறது. இதன் முதல் போட்டி 12ம் தேதி துவங்குகிறது.

இதற்கு அடுத்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இந்த இரண்டு தொடர்களுக்குமான இந்திய அணி கடந்த சில வாரங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது.

- Advertisement -

அக்டோபர் நான்காம் தேதி தொடங்கி அக்டோபர் 13ஆம் தேதி வரையில் நடைபெறும் ஐந்து போட்டிகள் கொண்ட இறுதி டி20 தொடர்கான இந்திய அணி தற்காலிகமாக அறிவிக்கப்படுவது நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

தற்பொழுது இந்த ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஹர்திக் பாண்டியா கேப்டனாகவும் சூரியகுமார் யாதவ் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். மேலும் ஜெய்ஸ்வால், திலக் வர்மா மற்றும் முகேஷ் குமார் மூவருக்கும் முதல் வாய்ப்பு தரப்பட்டிருக்கிறது.

இந்த அறிவிக்கப்பட்ட வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடருக்கான இந்திய அணியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட, நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் மிகச் சிறப்பாக செயல்பட்ட மூன்று இளம் வீரர்கள் புறக்கணிக்கப்பட்டு இருக்கிறார்கள். அவர்கள் யார் என்று இந்த தொகுப்பில் பார்ப்போம்.

- Advertisement -

ரிங்கு சிங் :

நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் பேட்டிங்கில் பினிஷிங் இடத்தில் மிக அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அனுபவ வீரர்களையே ஆச்சரியப்படுத்தியவர். தொடர்ந்து ஐந்து பந்துகளுக்கு 5 சித்தர்கள் அடித்து அணியை வெல்ல வைத்து புதிய உலக சாதனையை இறுதி ஓவரில் படைத்தவர். எப்படியும் இவருக்கு இந்த டி20 தொடரில் இடம் உறுதி என்று செய்திகள் வெளியாகி இருந்த நிலையில், இவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டிருக்கிறது. நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் இவர் 14 ஆட்டங்களில் நான்கு அரை சதங்கள் உடன் 474 ரன்களை, 150 ஸ்ட்ரைக் ரேட்டில், 60 ஆவரேஜில் அடித்திருக்கிறார்.

ருதுராஜ் :

இந்த வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்களில் இந்திய அணியில் வாய்ப்பு பெற்ற இவருக்கு டி20 தொடரில் வாய்ப்பு மறுக்கப்பட்டு இருக்கிறது. ஐந்தாவது முறையாக ஐபிஎல் பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இந்த முறை இவர் 14 ஆட்டங்களில் நான்கு அரை சதங்கள் உடன், 590 ரன்களை, 147 ஸ்ட்ரைக் ரேட்டில், 42 ஆவரேஜில் அடித்திருக்கிறார்.

ஜிதேஷ் சர்மா :

மிகத் துல்லியமான அதிரடி தாக்குதல் ஆட்டத்திற்குச் சொந்தக்காரர். ஆட்டத்தில் எவ்வளவு வேகம் காட்டினாலும் பந்துகளை மிகச் சுத்தமாக அடிக்கக்கூடிய அபூர்வமான அதிரடி ஆட்டக்காரராக இவர் விளங்கினார். இவரது இந்த திறமை பல முன்னாள் வீரர்களை ஆச்சரியப்படுத்தியது. நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் இந்த விக்கெட் கீப்பிங் பஞ்சாப் கிங்ஸ் பேட்ஸ்மேன் 14 போட்டிகளில் 309 ரன்களை, 156 ஸ்ட்ரைக் ரேட்டில் அடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.