2024-ல் இந்திய அணிக்கு சவாலான 3 தொடர்கள்.. ஏற்பட இருக்கும் பெரிய மாற்றங்கள்!

0
566
ICT

ஒட்டுமொத்த உலகமும் புது ஆண்டில் அடி எடுத்து வைத்திருக்கிறது. புதிதாக பிறந்திருக்கும் 2024ஆம் ஆண்டில் இந்திய அணிக்கு மிகவும் சவாலான மூன்று கிரிக்கெட் தொடர்கள் இருக்கின்றது.

இந்த மூன்று முக்கியமான கிரிக்கெட் தொடர்களிலும் இந்திய அணி எப்படி செயல்படுகிறது என்பதை வைத்தே, இந்த ஆண்டு இந்திய அணியின் மொத்த செயல்பாட்டையும் மதிப்பிட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்தியா இங்கிலாந்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் :

இந்த மாதம் ஜனவரி 25ஆம் தேதி இந்த ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் போட்டி ஹைதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் துவங்க இருக்கிறது.

அடுத்த வருடம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி நுழைய வேண்டும் என்றால், இந்தத் தொடரை பெரிய அளவில் கைப்பற்ற வேண்டியது மிக முக்கியமானது.

- Advertisement -

மெக்கலம் பயிற்சியில் மற்றும் பென் ஸ்டோக்ஸ் தலைமையில் இங்கிலாந்து அதிரடியான முறையில் டெஸ்ட் கிரிக்கெட்டை அணுகி வருகிறது. எனவே சுழலுக்கு சாதகமான இந்தியாவில் எப்படி விளையாடுவார்கள் என்பது பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

டி20 உலகக்கோப்பை :

ஐபிஎல் தொடர் முடிந்து ஜூலை மாதத்தில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் டி20 உலகக் கோப்பை நடக்க இருக்கிறது. 12 ஆண்டுகளாக எந்த உலகக் கோப்பையும் வெல்லாத இந்திய அணிக்கு, இந்த உலகக் கோப்பையை வெல்ல வேண்டிய பெரிய கட்டாயம் இருக்கிறது. மேலும் இந்த டி20 உலக கோப்பையை ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலிக்கு கடைசி டி20 உலகக் கோப்பையாக இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இவர்கள் இருவரும் விளையாடுவார்களா? என்பது முடிவாகவில்லை.

இந்தியா-ஆஸ்திரேலியா 5 போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் டிராபி :

இந்த முறை இந்தியா இந்த தொடரில் விளையாடுவதற்கு இந்த ஆண்டில் இறுதியில் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்கிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இந்திய அணிக்கு இது எல்லா தொடர்களையும் விட முக்கியமானது.

கடந்த இரண்டு ஆஸ்திரேலிய டெஸ்ட் சுற்றுப்பயணங்களிலும் இந்திய அணியே வென்று வந்திருக்கிறது. அதே சமயத்தில் பேட் கம்மின்ஸ் தலைமையில் ஆஸ்திரேலியா அசுரத்தனமாக உருவெடுத்திருக்கிறது. எனவே இந்தத் தொடர் உலக கிரிக்கெட்டில் மிகவும் முக்கியத்துவத்தை பெற்றிருக்கிறது. இந்த மூன்று தொடர்களும் இந்திய கிரிக்கெட் அணிக்கு பெரிய சவாலை இந்த ஆண்டில் கொடுக்கக்கூடியது!