6 ஓவரில் 6 விக்கெட்ஸ்… கச்சிதமாக வேலையை முடித்த அஸ்வின், உமேஷ் யாதவ்.. 197 ரன்களுக்கு ஆஸ்திரேலியா ஆல்அவுட்!

0
3123

இரண்டாம் நாளில் உமேஷ் யாதவ், அஸ்வின் இருவரின் அபாரமான பந்துவீச்சில் ஆஸி., அணி 197 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் மூன்றாவது டெஸ்ட் போட்டி இந்தூர் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.

- Advertisement -

முதலில் பேட்டிங் செய்யும் முடிவு இந்திய அணிக்கு சாதகமாக அமையவில்லை. ஆஸ்திரேலியா சுழல் பந்துவீச்சாளர்களின் அபாரமான பந்துவீச்சால் 109 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதைத்தொடர்ந்து பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணியினர் இந்தியாவின் பந்துவீச்சை நன்றாக எதிர்கொண்டனர்.

முதல் நாள் முடிவில் நான்கு விக்கெட்டுகள் இழப்பிற்கு 156 ரன்கள் அடித்திருந்தனர். ஆஸ்திரேலிய அணி துவக்க வீரர் கவாஜா 60 ரன்கள், நட்சத்திர வீரர் லபுஜானே 31 ரன்கள், கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் 26 ரன்கள் அடித்திருந்தனர்.

முதல் நாள் முடிவில் கேமரூன் கிரீன் மற்றும் பீட்டர் ஹான்ஸ்கோம் இருவரும் களத்தில் இருந்தனர். இந்தியா சார்பில் ஜடேஜா நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார்.

- Advertisement -

இன்று இரண்டாம் நாள் ஆட்டத்தை துவங்கிய இந்திய அணிக்கு துவக்கத்தில் விக்கெட்டுகள் எதுவும் விழவில்லை. முதல் செஷனில், ட்ரிங்க்ஸ் இடைவேளை முன்பு வரை 16 ஓவர்களில் 30 ரன்கள் அடித்து விக்கெட் எதுவும் இழக்காமல் இருந்தது ஆஸ்திரேலிய அணி.

இரண்டாவது செஷனில், உமேஷ் யாதவ் பௌலிங் செய்ய துவங்கினார். தனது வேகத்தில் அசத்தி அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்த இந்திய அணிக்கு நம்பிக்கை பிறந்தது. மறுமுனையில் தனது பங்கிற்கு அஸ்வின் விக்கெட் எடுக்க, இந்த செஷனில் 6.3 ஓவர்களில் வெறும் 10 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து ஆறு விக்கெட்டுகளை கைப்பற்றிய இந்திய அணி மீண்டும் ஆட்டத்திற்குள்ளும் திரும்பியது.

இன்னிங்ஸ் முடிவில் 97 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன ஆஸ்திரேலியா, இந்தியாவை விட 88 ரன்கள் முன்னிலை வகிக்கிறது.