27 ஃபோர் ; 14 சிக்ஸர்; 257 ரன்ஸ்; பஞ்சாபை நொறுக்கி இரண்டாவது அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது லக்னோ!

0
794
LSG

ஐபிஎல் பதினாறாவது சீசனில் இன்று 38வது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியும் பஞ்சாப் மொஹாலி மைதானத்தில் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன!

இந்தப் போட்டியில் முதலில் டாசில் வென்ற பஞ்சாப் கேப்டன் ஷிகர் தவான் பந்துவீச்சை முதலில் தேர்ந்தெடுத்தார். லக்னோ துவக்க ஆட்டக்காரர் கே எல் ராகுல் ஆட்டத்தின் முதல் பந்தில் தந்த கேட்ச்சை அதர்வா தவறவிட்டார்.

- Advertisement -

இங்கிருந்து பஞ்சாப் அணிக்கு பிரச்சனைகள் ஆரம்பித்தது. கே.எல்.ராகுல் ஒன்பது பந்தில் ஒரு பவுண்டரி ஒரு சிக்ஸர் உடன் 12 ரன்கள் வெளியேறினாலும், இன்னொரு துவக்க ஆட்டக்காரர் கையில் மேயர்ஸ் அதிரடியில் பிரித்தெடுத்து 20 பந்துகளில் அரை சதத்தை தொட்டு, 24 பந்துகளில் ஏழு பவுண்டரி நான்கு சிக்ஸர்கள் உடன் எடுத்து ஆட்டம் இழந்தார்.

மூன்றாவது விக்கட்டுக்கு வந்த இளம் வீரர் ஆயுஷ் பதோனி 24 பந்துகளில் 3 பவுண்டரி மூன்று சிக்ஸர்கள் உடன் 43 ரன்கள் எடுத்தார். நான்காவது விக்கட்டுக்கு வந்த ஸ்டாய்னிஸ் 40 பந்துகளில் ஆறு பவுண்டரி மற்றும் ஐந்து சிக்ஸர்கள் உடன் 72 ரன்கள் எடுத்தார்.

ஐந்தாவது விக்கட்டுக்கு வந்த நிக்கோலஸ் பூரன் 19 பந்துகளில் ஏழு பவுண்டரி மற்றும் ஒரு சிக்சர் உடன் 45 ரன்கள் எடுத்தார். அடுத்து வந்த தீபக் ஹூடா ஆறு பந்துகளில் இரண்டு பவுண்டரி உடன் 11 ரன்கள் எடுத்தும், குர்னால் பாண்டியா இரண்டு பந்துகளில் ஒரு பவுண்டரி உடன் ஐந்து ரன்கள் எடுத்தும் ஆட்டம் இழக்காமல் களத்தில் நின்றார்கள்.

- Advertisement -

லக்னோ அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களுக்கு ஐந்து விக்கட்டுகள் இழப்புக்கு 257 ரன்கள் எடுத்தது. இது ஒட்டுமொத்த ஐபிஎல் வரலாற்றில் இரண்டாவது அதிகபட்ச ரன்கள் ஆகும். இதற்கு முன்பு பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி புனே வாரியர்ஸ் அணிக்கு எதிராக ஐந்து விக்கெட்டுகள் இழப்புக்கு 263 ரன்கள் எடுத்தது அதிகபட்ச ரன்னாக இருந்து வருகிறது.

இந்தப் போட்டியில் களமிறங்கிய லக்னோ பேட்ஸ்மேன்கள் அனைவரும் குறைந்தது ஒரு பவுண்டரியாவது அடித்திருக்கிறார்கள். இந்தப் போட்டியில் பஞ்சாப் அணி குறைந்த ரண்களில் சுருண்டு தோல்வி அடைந்தால் அவர்களது ரன் ரேட் அதிக அளவில் அடிவாங்கி அவர்கள் பிளே ஆப் சுற்றுக்கு செல்வதில் பெரிய பிரச்சனைகள் உண்டானாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.