175 இன்னிங்ஸ் குறைவு.. 49வது சதம்.. கோலி சச்சின் சாதனையை சமன் செய்தார்.. கொல்கத்தாவில் திருவிழா!

0
452
Virat

நடப்பு 13வது ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இன்று தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக இந்திய அணி கொல்கத்தா மைதானத்தில் விளையாடி வருகிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு கேப்டன் ரோஹித் சர்மா 40, கில் 23 ரன்கள் எடுத்து வெளியேறினார்கள்.

- Advertisement -

கொல்கத்தா ஆடுகளம் கொஞ்சம் மெதுவாகவும் சுழற் பந்துவீச்சுக்கு சாதகமாகவும் இருந்த காரணத்தினால், அடுத்து வந்த விராட் கோலி மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் இருவரும் ஜோடி சேர்ந்து மிகவும் பொறுமையாகவும் பொறுப்பாகவும் விளையாடினார்கள்.

இதற்கு அடுத்து சிறப்பாக விளையாடிய இருவரும் அரைசதம் கடந்தார்கள். ஆரம்பத்தில் பொறுமையாக விளையாடிய ஸ்ரேயாஸ் ஐயர் பிறகு அதிரடியாக விளையாடி 77 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

இதற்கு அடுத்து வந்த கேஎல் ராகுல் 8 மற்றும் சூரியகுமார் 22 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்கள். ஒரு பக்கம் மிகவும் நிதானமாகவும் புத்திசாலித்தனமாகவும் விளையாடிய விராட் கோலி இறுதியாக 120 பந்துகளில் தனது 49ஆவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் சதத்தை எட்டினார்.

- Advertisement -

இதன் மூலம் ஒரு நாள் கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கர் அதிக சதம் அடித்திருந்த சாதனையை சமன் செய்திருக்கிறார். சச்சின் டெண்டுல்கருக்கு இதற்கு 452 இன்னிங்ஸ்கள் தேவைப்பட்டது. ஆனால் விராட் கோலி 277 இன்னிங்சில் இதை செய்து விட்டார். 175 இன்னிங்ஸ்கள் குறைவாக அடித்திருக்கிறார்.

இறுதி கட்டத்தில் வந்த ரவீந்திர ஜடேஜா 19 பந்துகளில் 29 ரன்கள் எடுக்க, ஆட்டமிழக்காமல் களத்தில் நின்ற விராட் கோலி 121 பந்துகளில் 101 ரன்கள் எடுக்க, 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 326 ரன்கள் எடுத்திருக்கிறது.

விராட் கோலி இன்று தனது 35 வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். கிரிக்கெட் உலகில் முறியடிக்க முடியாது என்று பலரும் நம்பிய சச்சினின் ஒருநாள் கிரிக்கெட் சதசாதனையை விராட் கோலி சமன் செய்திருப்பது மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்றாகப் பார்க்கப்படுகிறது!