264 ரன்.. டெல்லியை புரட்டி பஞ்சாப் செய்த மெகா சாதனை.. 7 போட்டிகளாக ஸ்ரேயாஸ் டீம் புதிய சரித்திரம்.. டெல்லி பரிதாப தோல்வி

0
204
Shreyas

இன்று ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் சாதனை வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. இரு அணிகளும் தாங்கள் விளையாடிய கடைசி போட்டியில் களம் இறக்கிய அதே அணியை மீண்டும் களம் இறக்கின.

- Advertisement -

கேஎல்.ராகுல் சாதனை

இதைத்தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு கேஎல்.ராகுல் இறுதிவரை ஆட்டம் இழக்காமல் 67 பந்துகளில் 16 பவுண்டரிகள் 9 சிக்ஸர்கள் உடன் 152 ரன்கள் எடுத்தார். நிதிஷ் ராணா 44 பந்துகளில் 11 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 91 ரன்கள் எடுத்தார். டெல்லி 20 ஓவரில் இரண்டு விக்கெட் இழப்புக்கு 264 ரன்கள் எடுத்தது.

இந்த போட்டியில் கேஎல்.ராகுல் 150 ரன் கடந்து எடுத்து ஒரு டி20 போட்டியில் அதிக ரன் எடுத்த இந்திய வீரராகவும், ஐபிஎல் தொடரில் ஒரு போட்டியில் 150 ரன்கள் தாண்டி எடுத்த முதல் வீரராகவும் பிரம்மாண்ட சாதனை படைத்தார்.

- Advertisement -

பஞ்சாப் ருத்ர தாண்டவம்

இதைத்தொடர்ந்து பெரிய இலக்கை நோக்கி இறங்கிய பஞ்சாப் அணி பவர் பிளேவில் ருத்ரதாண்டவம் ஆடி 116 ரன்கள் எடுத்தது. இதைத் தொடர்ந்து அந்த அணிக்கு முதல் விக்கெட்டுக்கு 126 ரன் பார்ட்னர்ஷிப் வந்தது. பிரியன் ஆர்யா 17 பந்துகளில் 2 பவுண்டரிகள் 5 சிக்ஸர்கள் உடன் 43 ரன்கள் எடுத்தார்.

இன்னொரு முனையில் அதிரடியில் மிரட்டிய பிரப்சிம்ரன் சிங் 26 பந்துகளில் 9 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களுடன் 76 ரன்கள் குவித்தார். இறுதிவரை களத்தில் நின்ற கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 36 பந்துகளில் 3 பவுண்டரிகள் 7 சிக்ஸர்கள் உடன் 71 உடன் எடுத்தார். பஞ்சாப் 18.5 ஓவரில் இலக்கை எட்டி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதையும் படிங்க : 19 வருட ஐபிஎல்.. இந்தியர்களை பெருமைப்படுத்திய கேஎல் ராகுலின் மாஸ் சாதனை.. டெல்லியில் புதிய வரலாறு

இதற்கு முன்பாக மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக பஞ்சாப் 262 ரன்கள் இழப்பை துரத்தியது சாதனை துரத்தலாக இருந்தது. தற்போது இதை முறியடித்து புதிய சாதனையை பஞ்சாப் படைத்திருக்கிறது.

- Advertisement -