26 வயதே மட்டுமான இந்திய கிரிக்கெட் வீராங்கனை திடீர் ஓய்வு!

0
105
Kalpana

இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் ஆக இருந்து வந்த ஆந்திராவை சேர்ந்த ஆர்.கல்பனா இன்று திடீரென ஓய்வு முடிவை அறிவித்துள்ளது இந்திய கிரிக்கெட் வட்டாரங்களில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காரணம் அவரது வயது வெறும் இருபத்தி ஆறு மட்டும்தான்.

ஆந்திராவின் குண்டூர் நகரை சேர்ந்த ரவி வெங்கடேஷ்வரலு என்கின்ற ஆட்டோ ரிக்ஷா ஓட்டுனரின் மகள் தான் இவர். பெரிய வறுமையின் பின்னணியில் இருந்து இந்திய கிரிக்கெட் அணிக்கு தேர்வாகியவர். ஆனால் இன்று திடீரென ஓய்வு முடிவை அறிவித்து அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறார்.

- Advertisement -

தற்போது இவர் இந்திய ரயில்வேயில் விஜயவாடாவில் பணிபுரிந்து வருகிறார். விஜயவாடாவில் உள்ள நாளந்தா கல்லூரியில் பிகாம் பட்டம் பெற்றுள்ளார். இவர்தான் இவரது குடும்பத்தில் முதல் பட்டதாரி என்பது குறிப்பிடத்தக்கது. ஆரம்பத்தில் இவர் கிரிக்கெட்டை தேர்ந்தெடுத்த பொழுது வறுமையால் கிரிக்கெட்டை தொடர முடியாமல் நிறைய கஷ்டங்களை சந்தித்து இருக்கிறார்.

இதுபற்றி அவர் கூறும்போது ” ஆரம்பத்தில் நான் கிரிக்கெட் விளையாடும் பொழுது என் தந்தை ஆட்டோ ரிக்ஷா ஓட்டுனர் என்பதால் என்னால் கிரிக்கெட் உபகரணங்களை வாங்குவதற்கு பெரிய சிரமமாக இருந்தது. கிரிக்கெட் விளையாடுவதை விட்டுவிடலாம் என்று இருந்தேன். இந்த நேரத்தில் எனது பயிற்சியாளர் தான் எனக்கு எல்லாமுமாக இருந்து உதவி செய்தார்” என்று தெரிவித்து இருந்தார்.

இவர் முதன்முதலில் 2015ஆம் ஆண்டு இந்திய அணிக்காக தேர்வு செய்யப்பட்டார். பிறகு 2016ஆம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிராக இவர் முதன் முதலில் அறிமுகம் ஆனார். மொத்தம் இந்திய அணிக்காக 7 போட்டிகளில் கலந்து கொண்டுள்ள இவர் ஒரு விக்கெட் கீப்பராக மூன்று கேட்ச்கள் மற்றும் ஒரு ஸ்டம்பிங் செய்துள்ளார்.

- Advertisement -

இவர் 2016ஆம் ஆண்டு அணியில் இருந்து நீக்கப்பட்ட பின்னர் உள்நாட்டு போட்டிகளில் விளையாடி வந்தார். இவரது உள்நாட்டுப் போட்டி 2021 ஆம் ஆண்டு அமைந்தது. 2019ஆம் ஆண்டு ட்ரையல்பிளேசர் அணிக்காக டி20 போட்டிகளில் விளையாடினார். இவ்வளவு சிறிய வயதில் இவரது ஓய்வு அறிவிப்பு ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாக தான் இருக்கிறது. வறுமையில் இருந்து வந்து அளவில் சாதிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட வீராங்கனை இவர்!