26 ரன் 3 விக்கெட்.. சஞ்சு சாம்சன் அதிரடி சதம்.. கடைசி வரை போராடி மாறிய மேட்ச்.. விஜய் ஹசாரே போட்டியில் சுவாரஸ்யம் .!

0
6022

இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சன் இந்திய அணியில் இடம் பிடிப்பதற்காக நீண்ட காலம் போராடி வருகிறார். இவர் தொடர்ந்து இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டு வருவது ரசிகர்கள் பலருக்கும் ஏமாற்றத்தை கொடுத்தது. இந்நிலையில் தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கும் இந்திய அணியில் சஞ்சீவ் சாம்சன் இடம் பெற்று இருக்கிறார்.

தற்போது நடைபெற்று வரும் விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் இன்று ரயில்வே அணியுடன் ஆட்டத்தில் சதம் அடித்து அசத்திருக்கிறார் சஞ்சு சாம்சன். இதனைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் அவரை பாராட்டி வரும் ரசிகர்கள் அவருக்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுக்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்திருக்கின்றனர்.

- Advertisement -

முன்னதாக இன்று பெங்களூர் நகரில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் ஆடிய ரயில்வே அணி 255 ரன்கள் எடுத்தது. இதனைத் தொடர்ந்து ஆடிய கேரளா 26 ரன்களுக்கு மூன்று விக்கெட் இழந்திருந்தபோது தளம் இறங்கிய சஞ்சு மிகச் சிறப்பாக விளையாடி சதம் எடுத்தார். 139 பந்துகளை சந்தித்த அவர் 6 சிக்ஸர்கள் மற்றும் 8 பவுண்டரிகளுடன் 126 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.

இவர் ஆட்டம் இழந்ததை தொடர்ந்து கேரள அணி 237 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால் 18 ரன்கள் வித்தியாசத்தில் ரயில்வே அணி வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் ரயில்வே அணியின் ராகுல் சகார் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். கேரள அணி தோல்வி அடைந்தாலும் சஞ்சு சாம்சன் இந்தப் போட்டியில் சதம் எடுத்தது ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக சமூக வலைதளங்களில் அவருக்கு வாழ்த்து குவிந்து வருகிறது.

கடந்த வருடம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டி தொடரில் இடம் பெற்றிருந்த சஞ்சு சாம்சன் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியும் அதன் பிறகு நடைபெற்ற ஒரு நாள் போட்டி தொடர்களில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. உலகக்கோப்பை தொடருக்கு முன்பாக நடைபெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டித் தொடரிலும் அவர் நிராகரிக்கப்பட்டார். தற்போது நடந்து முடிந்த டி20 போட்டி தொடர்களிலும் வாய்ப்பு நிராகரிக்கப்பட்டு இருந்தது.

- Advertisement -

எனினும் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக அறிவிக்கப்பட்டிருக்கும் ராகுல் தலைமையிலான ஒரு நாள் போட்டிகளுக்கான அணியில் இடம் பெற்று இருக்கிறார் சஞ்சு சாம்சன். இந்நிலையில் தற்போது அவர் அடித்திருக்கும் சதம் ஊடகங்களில் பேசு பொருளாகி இருக்கிறது. இது குறித்து பல்வேறு ரசிகர்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருவதோடு கிரிக்கெட் வாரியத்தையும் விமர்சித்து வருகின்றனர்.

இது தொடர்பாக பதிவு செய்திருக்கும் ரசிகர் ஒருவர் இப்போதாவது அவருக்கு நீண்ட காலம் அணியில் இடம் கொடுப்பீர்களா.? என தேர்வாளர்களுக்கு கேள்வி எழுப்பி இருக்கிறார்.? இதுவரை ஆடி இருக்கும் அனைத்து போட்டிகளிலும் சஞ்சீவ் சாம்சன் சிறப்பான ஆட்டத்தையே வெளிப்படுத்தி இருக்கிறார். எனினும் அவருக்கான இடம் தொடர்ந்து நிராகரிக்கப்பட்டு வருவது ரசிகர்களிடம் ஏமாற்றத்தை அளித்தது . தற்போது அவரது சதம் ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி இருப்பதோடு சஞ்சீவ் சாங்ஸ் புதிய நம்பிக்கையை விதைக்கும்.