229 ரன் வித்தியாசம்.. 22 ஓவரில் சுருண்ட இங்கிலாந்து.. தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி.. புள்ளி பட்டியலில் சரிவு.. என்ன தவறு நடந்தது?

0
1968
England

இன்று ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில் மும்பை வான்கடே மைதானத்தில் நடப்பு உலக சாம்பியன் இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் மோதிக்கொண்ட போட்டி நடைபெற்றது.

இந்த போட்டியில் முதலில் டாசில் வெற்றி பெற்ற இங்கிலாந்து கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தார். இங்கிலாந்து அணியில் பென் ஸ்டோக்ஸ் திரும்ப வந்தார். சாம் கரன், கிறிஸ் வோக்ஸ் மற்றும் லியாம் லிவிங்ஸ்டன் நீக்கப்பட்டு டேவிட் வில்லி மற்றும் அட்கிஸ்டன் உள்ளே வந்தனர்.

- Advertisement -

தென் ஆப்பிரிக்க அணியில் டெம்பா பவுமா காய்ச்சலால் இடம்பெறவில்லை. அவருக்கு பதிலாக ரீஸா ஹென்றிக்ஸ் முதல்முறையாக விளையாடும் வாய்ப்பைப் பெற்றார்.

தென் ஆப்பிரிக்க அணிக்கு இந்த தொடரில் இரண்டு சதங்கள் அடித்துள்ள குயிண்டன் டி காக் இந்த முறை நான்கு ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இதற்கு அடுத்து தென்னாப்பிரிக்கா பேட்ஸ்மேன்கள் வேறு விதத்தில் விளையாட ஆரம்பித்தார்கள்.

ரீஸா ஹென்றிக்ஸ் 85 (75), ராஸி வாண்டர் டேசன் 60 (61), எய்டன் மார்க்ரம் 42 (44), ஹென்றி கிளாசன் 109 (67), டேவிட் மில்லர் 5 (6), மார்க்கோ யான்சன் 75* (42), ஜெரால்ட் கோட்சி 3 (3), கேசவ் மகாராஜ் 1* (1) என ரன்கள் எடுக்க, 50 ஓவர்கள் முடிவில் 10 ஆப்பிரிக்க அணி 7 விக்கெட் இழப்புக்கு 399 ரன்கள் குவித்தது. இங்கிலாந்து தரப்பில் ரீஸ் டாப்லி மூன்று விக்கெட் கைப்பற்றினார்.

- Advertisement -

இதற்கு அடுத்து பெரிய இலக்கை நோக்கி களம் இறங்கிய இங்கிலாந்து அணிக்கு முன் வரிசை பேட்ஸ்மேன்கள் யாரும் நிலைத்து நிற்க வில்லை. முதல் 10 ஓவர்கள் முடிவதற்குள்ளாகவே, இங்கிலாந்து அணியின் தோல்வி உறுதியாகிவிட்டது.

இங்கிலாந்து அணியில் ஜானி பேர்ஸ்டோ 10, டேவிட் மலான் 6, ஜோ ரூட் 2, பென் ஸ்டோக்ஸ் 5, ஹரி புரூக் 17, ஜோஸ் பட்லர் 15, டேவிட் வில்லி 12 ஆதில் ரஷீத் 10, அட்கிஸ்டண்ட் 35, மார்க் வுட் 43* என ரன்கள் எடுக்க 22 ஓவர்களில் 170 ரன்களுக்கு இங்கிலாந்து சுருண்டு, 229 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.

தற்போது புள்ளி பட்டியலில் தென் ஆப்பிரிக்க அணி நான்கு போட்டிகளில் மூன்று வெற்றிகள் உடன் நல்ல ரன் ரேட்டில் மூன்றாவது இடத்தில் இருக்கிறது. நடப்பு உலக சாம்பியன் இங்கிலாந்து ஒன்பதாவது இடத்திற்கு தள்ளப்பட்டு இருக்கிறது. ரன் ரேட்டும் மிக மோசமாக அடி வாங்கி இருக்கிறது. சரியான காம்பினேஷனை உருவாக்காதது இங்கிலாந்து அணிக்கு பிரச்சினையாக மாறி இருக்கிறது. இந்தத் தோல்வி அரையிறுதி வாய்ப்பையும் கேள்விக்குறியாக்கி இருக்கிறது.