227 ரன் 9 விக்கெட்.. கடைசி விக்கெட்டில் தப்பிய பாகிஸ்தான்.. 3வது டெஸ்டில் ஆஸ்திரேலியா சறுக்கல்

0
5582

ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளை ஆஸ்திரேலியா அணி அபார வெற்றி பெற்றதைத் தொடர்ந்து மூன்றாவது டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

இதன்படி பேட்டிங்கை தொடங்கிய பாகிஸ்தான் அணிக்கு ஆரம்பமே மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ஷாபிக் மற்றும் சயிம் அயூப் ஆகியோர் 0 ரன்னில் வெளியேறினார்கள். இவர்கள் இருவரையும் ஸ்டார்க் மற்றும் ஹேசில் வுட் ஆகியோர் வீழ்த்தினர். கேப்டன் மசூத் மற்றும் பாபர் ஆசம் இருவரும் சிறிது நேரம் தாக்கு பிடித்து விளையாடினர். மசூத் மார்ஸ் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, பாபர் ஆஸம் கம்மின்ஸ் பந்து வீச்சில் வெளியேறினார். பின்னர் வந்த ஷகீர் 5 ரன்களில் கம்மின்ஸ் பந்து வீச்சில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.

- Advertisement -

கேப்டன் மசூத் 35 ரன்களும் பாபர் ஆசாம் 26 ரன்களும் குவித்தனர். பின்னர் களமிறங்கிய விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வான் நிதானமாக விளையாடி 103 பந்துகளில் 88 ரன்கள் குவித்தார். இதில் 10 பவுண்டரிகள் மற்றும் இரண்டு சிக்சர்களும் அடங்கும். மற்றொரு ஆட்டக்காரரான சல்மான் சிறப்பாக விளையாடி 53 ரன்களைக் குவித்தார். பாகிஸ்தான அணி 227 ரன்களுக்குள் 9 விக்கெட்டுகளை இழந்து இக்கட்டான நிலையில் இருந்தது.

230 ரன்களுக்கு பாகிஸ்தான் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து விடும் என்று ஆஸ்திரேலியா அணி நினைத்திருக்கக் கூடும். ஆனால் டெயிலெண்டாரான ஆமர் ஜமால் இனி இழக்க ஒன்றும் இல்லை என நினைத்து அதிரடியாக விளையாடி நான்கு சிக்ஸர்கள் மற்றும் ஒன்பது பவுண்டரிகளுடன் 97 பந்துகளில் 82 ரன்கள் அதிரடியாக விளாசினார்.

இதனால் மகிழ்ச்சியில் இருந்த பாகிஸ்தான் அணிக்கு சற்று சவாலான ஸ்கோரைக் கொடுத்தது. இறுதியில் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கட்களையும் இழந்து 313 ரன்கள் குவித்தது. ஆஸ்திரேலியா அணித் தரப்பில் கம்மின்ஸ் ஐந்து விக்கெட்டுகளும் ஸ்டார் இரண்டு விக்கெட்டுகளும் நாதன் லயன், மிச்சல் மார்ஷ் மற்றும் ஹெசில் வுட் ஆகியோர் தலா ஒரு விக்கட்டையும் கைப்பற்றினார்கள்.

- Advertisement -

பின்னர் ஆஸ்திரேலிய அணி களம் இறங்கி 6 ரன்கள் எடுத்திருந்த நிலையில் முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. இன்னும் நான்கு நாட்கள் எஞ்சி இருக்கும் நிலையில் இந்தப் போட்டி டிராவில் முடிய வாய்ப்பு இல்லை என்று கருதப்படுகிறது. எனவே பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியா அணியை விரைவில் ஆட்டம் இழக்க செய்து தங்களது முதல் வெற்றியை பதிவு செய்ய போராடும் என்பதில் சந்தேகம் இல்லை.