இன்று ரஞ்சி டிராபியில் ஜார்க்கண்ட் மற்றும் தமிழ்நாடு அணிகள் மோதி கொண்ட போட்டியில் முதல் நாளில் மட்டும் 21 விக்கெட்டுகள் விழுந்து ஆச்சரியப்படுத்தி இருக்கிறது.
தற்போது ரஞ்சி டிராபி இரண்டாம் கட்ட போட்டிகள் நடைபெற்றுக் கொண்டு வருகிறது. இதில் தன்னுடைய பிரிவில் முதல் இடத்தில் இருக்கும் தமிழ்நாடு அணி ஜார்க்கண்ட் அணியை எதிர்த்து விளையாடுகிறது. இன்று தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற ஜார்க்கண்ட் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
தமிழ்நாடு சிறப்பான பந்துவீச்சு
முதலில் பேட்டிங் செய்ய வந்த ஜார்கண்ட் அணி 53.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 156 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணிக்கு சரண்தீப் சிங் 52 ரன்கள், விராட் சிங் 40 ரன்கள் மற்றும் அனுக்குல் ராய் எடுத்தார்கள். நட்சத்திர வீரர் கேப்டன் இசான் கிஷான் 8 ரன்
கள் மட்டுமே எடுத்து ஏமாற்றம் தந்தார்.
இதைத்தொடர்ந்து ஜார்க்கண்ட் அணி 186 ரன்னில் சுருண்டது. தமிழக அணியின் பந்துவீச்சில் கேப்டன் சாய் கிஷோர் 3 விக்கெட்டுகள், அஜித் ராம் மூன்று விக்கெட்டுகள் கைப்பற்றினார்கள். மேலும் முகமத் மற்றும் லக்சைய் ஜெயின் தலா இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தினார்கள்.
55 ரன்னுக்கு 10 விக்கெட்
இதை தொடர்ந்து விளையாடிய தமிழக அணிக்கு முதல் விக்கெட்டுக்கு 51 ரன் பார்ட்னர்ஷிப் வந்தது. தமிழக அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் நாராயணன் ஜெகதீசன் 16 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இன்னொரு தொடக்க ஆட்டக்காரர் முகமது அலி 48 பந்தில் 37 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
இந்த போட்டியில், தமிழக அணி 51 ரன்னுக்கு விக்கெட் ஏதும் இழக்காமல் இருந்து, அடுத்து வெறும் 55 ரன்கள் மட்டும் எடுத்து 10 விக்கெட்டுகளை இழந்து 106 ரன்னில் ஆல் அவுட் ஆகி அதிர்ச்சி கொடுத்தது. அந்த அணியின் பகுதி நேர பந்துவீச்சாளரும் தொடக்க ஆட்டக்காரருமான உத்கர்ஸ் சிங் ஆறு விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
இதையும் படிங்க : 654 ரன்.. கவாஜா ரன் குவிப்பு.. மொத்தம் 3 சதங்கள்.. இலங்கை அணி பரிதாபம்.. ஆஸி ஆதிக்கம்.. முதல் டெஸ்ட்
இதைத்தொடர்ந்து பேட்டிங் செய்ய வந்த ஜார்க்கண்ட் அணி இரண்டு ஓவரில் ஐந்து ரன்னுக்கு ஒரு விக்கெட் இழந்திருக்கிறது. இன்றைய முதல் நாளில் மட்டும் இரண்டு அணிகளும் தங்களின் முதல் இன்னிங்ஸை விளையாடி முடித்திருக்கின்றன. மேலும் மொத்தமாக 21 விக்கெட்டுகள் சரிந்து இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.