சாம்பியன்ஸ் டிராபி இந்திய அணி அறிவிப்பு தேதி மாற்றம்.. என்ன காரணம்? – வெளியான புதிய செய்திகள்

0
1223
Bcci

பாகிஸ்தான் மற்றும் துபாய் என இரு நாடுகளில் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் பிப்ரவரி 19ஆம் தேதி துவங்குகிறது. இதற்கான இந்திய அணி அறிவிப்பு நாளை வெளியாகும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த தேதி மாற்றப்படுகிறது என்ற செய்திகள் வெளியாகி இருக்கிறது.

2023 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் புள்ளி பட்டியலில் முதல் எட்டு இடங்களை பிடித்த அணிகளை கொண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடரை தற்போது ஐசிசி நடத்துகிறது. இதில் இந்தியா இடம் பெற்றுள்ள குழுவில் நியூசிலாந்து, பாகிஸ்தான், மற்றும் பங்களாதேஷ் அணிகள் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்திய கிரிக்கெட் வாரியம் புது முடிவு

ஐசிசி அனைத்து அணிகளும் ஜனவரி 12ஆம் தேதி தங்களுடைய சாம்பியன்ஸ் டிராபி தற்காலிக அணியை வெளியிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தது. எனவே இந்தியத் தேர்வுக்குழு இன்று நடைபெறும் கூட்டத்திற்கு அடுத்து நாளை அணியை அறிவிக்கும் என இந்திய தரப்பில் எதிர்பார்க்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் வாரியம் ஐசிசி இடம் கூடுதல் அவகாசம் கேட்க இருப்பதாக தெரிகிறது. சாம்பியன்ஸ் டிராபி முதல் போட்டி பாகிஸ்தான் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே பிப்ரவரி 19ஆம் தேதி துவங்குகிறது. எனவே ஒரு மாதம் முன்னதாக கணக்கிட்டு, ஜனவரி 19ஆம் தேதி இந்திய அணி அறிவிக்க அவகாசம் கேட்கப்பட போவதாக கூறப்பட்டிருக்கிறது.

- Advertisement -

தேதி தள்ளிப் போக காரணம் என்ன?

இங்கிலாந்து அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் சொந்த மண்ணில் இந்திய அணி விளையாட இருக்கிறது. இதில் ஒரு நாள் தொடர் சிறந்த பயிற்சியாக இந்திய அணிக்கு அமையும் என்று பிசிசிஐ நினைக்கிறது. எனவே இதில் பெரிய மாற்றங்கள் இல்லாமல் வீரர்களை விளையாட வைத்து, அதைக் கொண்டு சாம்பியன்ஸ் டிராபிக்கான அணியை தேர்வு செய்ய இந்திய தேர்வுக்குழு விரும்புவதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க : ஹீரோவை வணங்கும் கலாச்சாரம் அதிகம்.. 2011-12லும் இப்பவும் இந்திய அணியின் வீழ்ச்சிக்கு அதுவே காரணம் – மஞ்சுரேக்கர் பேட்டி

மேலும் நீண்ட ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் இருந்து திரும்பி இருப்பதாலும், சாம்பியன்ஸ் டிராபிக்கு அணியை அறிவிப்பதில் இந்திய கிரிக்கெட் வாரியம் ஐசிசி இடம் கூடுதலாக ஒரு வார காலத்தை கேட்க இருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கிறது. மேலும் இன்று நடைபெறும் கூட்டத்தில் கேப்டன் ரோஹித் சர்மா அஜித் அகர்கர் உடன், இந்திய கிரிக்கெட் வாரிய புதிய செயலாளர் மற்றும் பொருளாளர் இருவரும் கலந்து கொள்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -