இன்று நடப்பு ஆசியக் கோப்பை தொடரின் இரண்டாவது சுற்று போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக டாஸ் வென்று இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்திருக்கிறது.
இந்திய அணி கடந்த போட்டியை அபுதாபியில் ஓமான் அணிக்கு எதிராக விளையாடியது. இந்த போட்டியில் கொடுக்கப்பட்டிருந்த பும்ரா மற்றும் வருண் சக்கரவர்த்தி இருவரும் மீண்டும் திரும்ப வந்திருக்கிறார்கள். ஹர்ஷித் ராணா மற்றும் அர்ஸ்தீப் சிங் நீக்கப்பட்டிருக்கிறார்கள்.
பாகிஸ்தான் அணியின் மாற்றம்
முதலில் பேட்டிங் செய்ய இருக்கும் பாகிஸ்தான் அணியில் ஹுசைன் தலாத் மற்றும் பாகிம் அஷ்ரப் இருவரும் சேர்க்கப்பட்டு, ஹசன் நவாஸ் மற்றும் குல்தீஸ் ஷா இருவரும் நீக்கப்பட்டிருக்கிறார்கள். மொத்தம் மூன்று சுழல் பந்துவீச்சாளர்கள் 3 வீகப்பந்து வீச்சாளர்கள் என பவுலிங் யூனிட் அமைக்கப்பட்டிருக்கிறது.
பாகிஸ்தானின் பேட்டிங் வரிசையில் 10வதாக வரும் ஹாரிஸ் ரவுப் வரையில் சிக்சர் அடிக்கக்கூடிய வகையில் இருக்கிறார்கள். தற்போது துபாய் மைதானம் பேட்டிங் செய்வதற்கு கொஞ்சம் சாதகமாக மாறி வருகின்ற காரணத்தினால், முழு நேர பந்துவீச்சாளர்களை தேர்வு செய்து பாகிஸ்தான் புத்திசாலித்தனமாக செயல்பட்டு இருக்கிறது.
சூரியகுமார் பேச்சு
டாஸ் வென்ற இந்திய கேப்டன் சூர்யகுமார் பேசும்பொழுது “நாங்கள் முதலில் பந்து வீச இருக்கிறோம். ஆடுகளம் பார்ப்பதற்கு நன்றாக இருக்கிறது. நேற்று இங்கு நாங்கள் பயிற்சி செய்த போது பனி வந்தது. மேலும் நாங்கள் இந்த தொடருக்கு வந்ததிலிருந்து ஒவ்வொரு போட்டியையும் நாக் அவுட் போட்டியாகவே நினைத்து விளையாடுகிறோம். அபுதாபியில் இருந்தது வேறு வகையான விக்கெட். மேலும் இது எங்களுக்கு இன்னொரு சாதாரண ஆட்டம்” என்று கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க : எல்லாம் வேஸ்ட்.. இந்தியா 2 அணியை அனுப்பினால்.. ஆசிய கோப்பையில் இரண்டும்தான் பைனல் வரும் – அதுல் வாஸன் பேச்சு
பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி ஆகா கூறும்போது “டாஸ் வென்று இருந்தால் நாங்களும் முதலில் பந்துவீசி இருப்போம். இது ஒரு புதிய ஆட்டம் மேலும் இது ஒரு புதிய அனுபவம். மனநிலையைப் பொறுத்தவரையில் எதுவும் வித்தியாசமாக இல்லை இது இன்னொரு போட்டிதான். ஆடுகளம் மெதுவாக இருப்பது போல தோன்றுகிறது. பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சிறப்பாக ஆரம்பிக்க விரும்புகிறேன்” என்று கூறியிருக்கிறார்.






