எல்லாம் வேஸ்ட்.. இந்தியா 2 அணியை அனுப்பினால்.. ஆசிய கோப்பையில் இரண்டும்தான் பைனல் வரும் – அதுல் வாஸன் பேச்சு

0
174
Atul

இந்திய அணி ஆசியக் கோப்பை தொடரில் இரண்டு அணிகளை விளையாட அனுப்பி வைத்தால் இரண்டு அணிகளுமே இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் என இந்திய முன்னால் வேகப்பந்து வீச்சாளர் அதுல் வாஸன் தெரிவித்திருக்கிறார்.

இன்று இந்தியா பாகிஸ்தான் அணிகள் நடப்பு ஆசிய கோப்பை தொடரில் துபாய் மைதானத்தில் இரண்டாவது சுற்றில் விளையாட இருக்கின்றன. ஏற்கனவே இந்திய வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்காத காரணத்தினால் சர்ச்சைகள் சென்று கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இரண்டு அணிகளும் பைனல் வரும்

நடப்பு ஆசிய கோப்பை தொடரில் இதுவரை தோல்வி அடையாத அணியாக இந்திய அணி மட்டுமே இருக்கிறது. நேற்று பங்களாதேஷ் அணிக்கு எதிராக முதல் சுற்றில் தோல்வி அடையாத இலங்கையணி இரண்டாவது சுற்று முதல் போட்டியில் தோல்வி அடைந்தது. இதன் காரணமாக தற்பொழுது தொடர் சுவாரசியமடைந்திருக்கிறது.

இதுகுறித்து அதில் வாஸன் இது குறித்து அதில் வாசல் பேசும் பொழுது பேசும் பொழுது “இந்திய கிரிக்கெட்டிடம் நிறைய குவாலிட்டி இருக்கிறது. இதன் காரணமாக எங்களால் இரண்டு அணிகளை அனுப்ப முடியும். நாங்கள் இரண்டு அணிகளை அனுப்பினால் இரண்டு அணிகளுமே இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். அர்ஸ்தீப் விளையாட வைக்கப்படவில்லை என்று பேசுகிறார்கள். இது உண்மையில் நல்ல விஷயம். ஏனென்றால் நாங்கள் பெயர்களை பார்க்காமல் தேவையை மட்டுமே பார்க்கிறோம்”

- Advertisement -

ஓமான் தந்தது விழிப்புணர்வு

“முன்பு இந்திய கிரிக்கெட்டில் இப்படி இருந்தது கிடையாது. பெரிய வீரர்கள் பார்ம் மற்றும் உடல் தகுதி இல்லை என்றாலும் கூட தங்களின் பெயரை வைத்து விளையாடினார்கள். ஆனால் இப்பொழுது யார் போட்டிக்கு தேவையோ அவர்கள் மட்டுமே விளையாடுகிறார்கள். ஆஸ்திரேலியா வெகுகாலமாக இதையே செய்து வந்தது. தற்போது இந்திய கிரிக்கெட்டிலும் இது நடக்கிறது”

இதையும் படிங்க : நீங்க அதிரடியா ஆடினால், உங்கள் இடத்திற்கு ஆபத்தாகிவிடும்.. அபிசேக் சர்மாவுக்கு முன்னாள் வீரர் அட்வைஸ்

” ஓமான் அணிக்கு எதிராக நடந்தது போல எப்போதாவது நடக்கத்தான் செய்யும். பெயர் தெரியாத அணிகள் உங்களை அன்றைய நாளில் எல்லைக்குத் தள்ளும். ஆனாலும் உங்களிடம் இருக்கும் ஆழத்தைப் பாருங்கள் நீங்கள் நிச்சயம் வெற்றி பெற்று விட்டீர்கள். ஆனாலும் அந்தப் போட்டி இந்திய அணிக்கு நல்ல விழிப்புணர்வாக இருக்கும். அது குறித்து பேசி மீண்டும் இந்திய அணி சிறப்பாக வரும்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -