12 வருஷத்துக்கு பிறகு ஜெயிச்ச அந்த டீம் மாதிரி.. எங்களால இந்திய அணியை தோற்கடிக்க முடியும் – கோச் சமி கருத்து

0
107

இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. இதற்கு அடுத்ததாக அக்டோபர் மாதம் இரண்டாம் தேதி முதல் சொந்த மண்ணில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.

இந்த சூழ்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் பயிற்சியாளர் ஆன டேரன் சமி, இந்திய தொடர் குறித்து சில முக்கிய கருத்துகளை பேசி இருக்கிறார்.

- Advertisement -

சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய டி20 அணி தற்போது ஆசிய கோப்பை தொடரில் விளையாடும் நிலையில் அதற்குப் பிறகு இளம் வீரர் சுப்மான் தலைமையிலான இந்திய அணி அக்டோபர் மாதம் முதல் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்த இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட போகும் இந்திய அணி விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கலாம்.

இந்த சூழ்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் தற்போதைய பயிற்சியாளராக திகழும் முன்னாள் வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் டேரன் சமி, நியூசிலாந்து அணி 12 வருடங்களுக்குப் பிறகு இந்தியாவில் இந்திய அணியை வீழ்த்தி டெஸ்ட் தொடரை வெற்றி பெற்று வரலாறு படைத்தது போல எங்களாலும் அதனை செய்ய முடியும் என்று சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் கூறும் போது “எந்த ஒரு சூழ்நிலையிலும் எங்களது சீம் தாக்குதல் சிறப்பாக செயல்படக்கூடிய நிலைமையில் நாங்கள் இருக்கிறோம். எங்கள் வேகப்பந்துவீச்சுத் துறையில் தங்களுக்கென்று பன்முகத்தன்மை கொண்ட நான்கு வீரர்கள் உள்ளனர். எங்களிடம் ஷமர் ஜோசப் இருக்கிறார்,ஜெய்டன் இருக்கிறார், அவருக்கு வலுவான முன் கால் உள்ளது, அவர் பந்தை இருபுறமும் ஸ்விங் செய்ய முடியும்.

இதையும் படிங்க:உபியில் பிறந்து ஓமனுக்காக விளையாடும் குல்தீப் நண்பர்.. என்னுடைய குருவே தோனி தான்.. டிவியில் பார்த்தவர்களுடன் விளையாட போகிறேன்.. வினயக் ஷூக்லா

அதற்குப் பின்னர் அல்சாரி ஜோசப் பந்தை நன்றாக பவுன்ஸ் செய்ய முடியும். எனவே இவர்கள் அனைவரும் இந்திய அணியின் 20 விக்கெட்டுகள் வீழ்த்த முடியும் என்கிற நம்பிக்கை எனக்கு உள்ளது. நாங்கள் நிச்சயமாக வெற்றி பெற வேண்டும் என்கிற மனநிலையில் செல்வோம். ஓ ‘இது இந்தியா’ என்று மட்டும் நினைக்கப் போவதில்லை நியூசிலாந்து அணி நம்ப முடியாத அளவிற்கு சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெற்றது. எனது நியூசிலாந்து அணியை போலவே சிறப்பாக செயல்பட நாங்கள் தயாராக இருக்கிறோம்” என்று பேசி இருக்கிறார்.

- Advertisement -