2024 டி20 உலக கோப்பை.. இந்தியாவின் 15 பேர் கொண்ட வலிமையான உத்தேச அணி.. யார் கேப்டன்.?

0
15931

உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் வரும் ஜூன் மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இல் நடைபெறுகிறது. இன்னும் நான்கு மாதங்களே உள்ள நிலையில் இந்திய அணி டி20 அணியைத் தயார் படுத்தும் முயற்சியில் மிகத் தீவிரமாக இறங்கி உள்ளது. அதற்கான 15 பேர் கொண்ட உத்தேச அணியைத் தற்போது காணலாம்.

தொடக்க ஆட்டக்காரர்கள்

- Advertisement -

ரோகித் சர்மா, ஜெய்ஸ்வால்,இஷான் கிஷான்

ஜெய்ஸ்வால் நடந்து முடிந்த ஐபிஎல் சீசனில் ஒரு கவனிக்கப்பட வேண்டிய நட்சத்திரமாக இருந்துள்ளார். இவர் 10 டி20 இன்னிங்ஸ்களில் 170 ரன்களைக் குவித்துள்ளார். இவரது பார்ம் சிறப்பாக இருக்கும் பட்சத்தில் தற்போது டி20 உலக கோப்பையில் கவனிக்கப்பட வேண்டிய ஒரு முக்கியமான வீரர்.

சமீபத்தில் கிடைத்த தகவலின் படி ரோஹித் சர்மா டி20 உலக கோப்பையில் கேப்டனாக இருப்பார் என்று தெரிகிறது. அவர் விளையாடும் பட்சத்தில் இந்திய அணிக்கு அதிரடியான தொடக்கம் கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை. அவர் ஓய்வு பெறும் முன்னர் ஒரு உலகக்கோப்பையாவது வென்று கொடுத்த பெருமை அவரை சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

தற்போது இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் இஷான் கிஷான். இவர் 35 டி20 போட்டிகளில் விளையாடி பேட்டிங் சராசரி 25.7 வைத்துள்ளார். இருப்பினும் விக்கெட் கீப்பர்களாக கேஎல் ராகுல், ஜித்தேஸ் சர்மா மற்றும் ரிஷப் பன்ட் ஆகியோரும் உள்ளனர். எனவே இவர் உலக கோப்பையில் விளையாடுவாரா? என்பது உறுதியாகத் தெரியவில்லை.

மிடில் ஆர்டர் பேட்டர்கள்

விராட் கோலி, சூரியகுமார் யாதவ், திலக் வர்மா, ரிங்கு சிங்

விராட் கோலியின் உடல் தகுதி மிகவும் பிட் ஆக இருப்பதால் அவர் இந்த டி20 உலக கோப்பையில் விளையாடுவார் என்று தெரிகிறது. அவர் ஒரு முனையில் நங்கூரமாக விளையாடும் பட்சத்தில் அடுத்து வரும் பேட்ஸ்மேன்களுக்கு அச்சமின்றி சிறப்பாக ரன்களைக் குவிக்க உதவும். எனவே அவர் இந்த உலகக் கோப்பையில் விளையாடுவது மிகவும் முக்கியம். மேலும் டி20 உலகக் கோப்பை வரலாற்றில் அவரை அதிக ரன்களையும் எடுத்துள்ளார்.

தற்போது டி20 கிரிக்கெட் பொருத்தவரை நம்பர் ஒன் பேட்ஸ்மேன் சூரியகுமார் யாதவ். மைதானத்தின் அனைத்து திசைகளிலும் அடிக்கக்கூடிய இவர் உலக கோப்பையில் நிச்சயம் பெரும் பங்காற்ற அதிக வாய்ப்புள்ளது.

ஐபிஎல் 2022-ல் சீராக முன்னேறி வந்தவர் திலக் வர்மா. பந்து வீசக்கூடிய அரிதான இடது கை பேட்டர்களில் ஒருவர். இவர் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணிக்கு அறிமுகம் ஆனார். அத்தொடரில் அதிக ரன் குவித்தவரும் இவரே.

கொல்கத்தா அணி கண்டறிந்த சிறந்த பினிஷர்களில் ஒருவர் ரிங்கு சிங். அவரது சமீபத்திய இந்திய அணியின் அறிமுக செயல்பாடு மிகச் சிறப்பாக இருந்துள்ளது. எனவே அவர் இந்த உலக கோப்பையில் நிச்சயம் இடம் பெறுவார் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

ஆல் ரவுண்டர்கள் – ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, அக்சர்பட்டேல்

ரோஹித் சர்மா ஒருவேளை டி20 உலகக் கோப்பையில் விளையாடவில்லை என்றால் ஹர்திக் பாண்டியா அணியை வழி நடத்த அதிக வாய்ப்பு இருக்கிறது. மேலும் ஸ்பின் வீசக்கூடிய ஒரு பேட்டர் தேவை என்பதால் ஜடேஜா மற்றும் அக்சர் விளையாடலாம் என்று தெரிகிறது.

ரவி பிஷ்னாய்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் யுவேந்தர சஹால் தேர்வு செய்யப்படாததால் ரவி பிஷ்னாய் உலககோப்பை தொடரில் சுழற் பந்துவீச்சாளராக இடம்பெறுவார் என்று தெரிகிறது. எனவே வரும் உலகக் கோப்பை தொடரில் சுழற் பந்து வீச்சிற்கு அவர் தலைமை தாங்கலாம்.

வேகப்பந்து வீச்சு – பும்ரா,முகேஷ் குமார், அர்ஸ்தீப் சிங், முகமது சமி

பும்ரா மற்றும் அர்ஸ்தீப் சிங் ஆகியோர் கடந்த உலகக் கோப்பையில் விளையாடியுள்ளனர். இறுதிக் கட்ட ஓவர்களில் இவர்களின் பங்களிப்பு பெரும் உதவியாய் இருக்கும். முகேஷ் குமார் தற்போது இந்திய அணியில் இடம் பெற்று சிறப்பாக விளையாடி வருகிறார். அவரது பார்ம் சிறப்பாக இருக்கும் பட்சத்தில் உலகக்கோப்பை தொடரில் விளையாடலாம். மேலும் அனுபவ வீரரான முகமது சமி 50 ஓவர் உலகக் கோப்பை போட்டியில் மிகச் சிறப்பாக செயல்பட்டதால் அவர் டி20 தொடரில் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.