2024 உலக கோப்பை.. விராட் கோலி பற்றி சந்தேகமா?.. கங்குலி வெளிப்படை பேச்சு!

0
128
Virat

இந்தியாவில் மே மாதம் இறுதியில் ஐபிஎல் தொடர் முடிவடையும். இதற்கு அடுத்த ஜூன் மாதம் இந்த ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் டி20 உலகக்கோப்பை தொடர் நடைபெற இருக்கிறது.

நடக்க இருக்கும் இந்த டி20 உலகக்கோப்பை தொடருக்கு முன்பாக இந்திய அணிக்கு மூன்று சர்வதேச டி20 போட்டிகள் மட்டுமே இருக்கிறது. இந்தத் தொடரும் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக இந்தியாவில் வருகின்ற ஜனவரி 11ஆம் தேதி துவங்குகிறது.

- Advertisement -

இந்திய கிரிக்கெட் நிர்வாகம் டி20 உலகக் கோப்பை தொடருக்கு இந்திய அணி தயாராவதற்கு ஐபிஎல் தொடரையே பெரிய அளவில் நம்பி இருப்பதாக இதன் மூலம் தெரிய வருகிறது. இது எந்த அளவிற்கு பலன் கொடுக்கும் என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இதன் காரணமாக இந்தியாவின் முன்னணி வீரர்களான கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் நடக்க இருக்கும் டி20 உலக கோப்பை தொடரில் விளையாட விரும்புகிறார்களா? இவர்கள் இருவரையும் பிசிசிஐ விரும்புகிறதா? என்பது குறித்து எந்த தகவலும் தெரியாமல் இருந்து வருகிறது.

- Advertisement -

இதன் காரணமாக டி20 உலக கோப்பைக்கு எப்படியான இந்திய அணி அனுப்பப்படும் என்பது குறித்து யாராலும் இன்று வரை எதுவும் உறுதியாக சொல்ல முடியவில்லை. தற்பொழுது வாய்ப்பு பெற்று விளையாடும் இளம் வீரர்கள் உலகக் கோப்பை இந்திய அணியில் இடம் பெறுவார்களா என்பது தெரியாது.

இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் முன்னாள் இந்திய கிரிக்கெட் வாரிய தலைவருமான சவுரவ் கங்குலி கூறும் பொழுது “இந்தியா சிறந்த அணி. ஆனால் இந்தியா ஒரு போட்டியில் தோற்றால், உடனே இந்திய அணி பற்றி மக்கள் குறை கூற ஆரம்பித்து விடுகிறார்கள். தென் ஆப்பிரிக்காவில் ஒரு நாள் தொடரை வென்றும், டி20 மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் தொடர்களை சமன் செய்து இருக்கிறது. இதைவிட வேறு என்ன எதிர்பார்க்க முடியும்.

டி20 உலகக்கோப்பையை பொறுத்தவரை ரோகித் சர்மா கேப்டன் ஆக வந்து இந்திய அணியை வழிநடத்த வேண்டும். சந்தேகமே இல்லாமல் விராட் கோலி மிகச் சிறந்த பேட்ஸ்மேன். அவரும் வருகின்ற டி20 உலக கோப்பை இந்திய அணிகள் இடம் பெற்று விளையாட வேண்டும்” என்று கூறி இருக்கிறார்!

- Advertisement -