5 விக்கெட்.. ஆர்சிபி ஆல்ரவுண்டர் அசத்தல்.. சேலம் அணியை கூலாக வென்றது நெல்லை.. டிஎன்பிஎல் 2024

0
22
Sonu

இன்று டிஎன்பிஎல் எட்டாவது சீசனில் சேலம் மைதானத்தில் நெல்லை ராயல் கிங்ஸ் மற்றும் சேலம் ஸ்பார்டான்ஸ் அணிகள் மோதிக்கொண்ட போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் வந்து வீச்சில் சிறப்பாக செயல்பட்ட நெல்லை ராயல் கிங்ஸ் அணி சேலம் ஸ்பார்டான்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

இந்த போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற நெல்லை ராயல் கிங்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது. இரண்டு அணிகளிலுமே பெரிய நட்சத்திர வீரர்கள் என்று யாரும் கிடையாது. இரண்டு அணிகளுமே உள்ளூர் இளம் திறமைகளைக் கொண்ட அணிகளாக இருக்கின்றன.

- Advertisement -

இந்த நிலையில் முதலில் பேட்டிங் செய்ய வந்த சேலம் ஸ்பார்டான்ஸ் அணிக்கு ஆர்.பிஸ்ட் 20 பந்தில் 23 ரன்கள், சுஜித் சந்திரன் 18 பந்தில் 20 ரன்கள், விக்கெட் கீப்பர் ஆர்.கவின் 17 பந்தில் 16 ரன்கள் எடுத்தார்கள். அந்த அணி 19.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 141 ரன்கள் மட்டுமே எடுத்தது.

ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பெற்ற டிஎன்பிஎல் வீரரான சஞ்சய் யாதவியின் தம்பி சோனு யாதவ் இந்த போட்டியில் நெல்லை ராயல் கிங்ஸ் அணிக்காக பந்து வீச்சில் நான்கு ஓவர்களுக்கு 30 ரன்கள் தந்து ஐந்து விக்கெட் கைப்பற்றினார். இவர் ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணியில் இடம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்து இலக்கை நோக்கி விளையாடிய நெல்லை ராயல் கிங்ஸ் அணிக்கு அஜித் குருசாமி 36 பந்துகளில் 45 ரன்கள் எடுத்தார். இறுதிவரை களத்தில் நின்ற சூரிய பிரகாஷ் 35 பந்துகளில் 43 ரன்கள் எடுக்க, நெல்லை ராயல் கிங்ஸ் அணி 18.5 ஓவரில் ஏழு விக்கெட் இழப்புக்கு இலக்கை எட்டி மூன்று விக்கெட் வித்யாசத்தில் வெற்றி பெற்றது.

- Advertisement -

இதையும் படிங்க : உலக லெஜெண்ட்ஸ் தொடர்.. இந்திய செமி பைனல் அட்டவணை.. எந்த சேனலில் பார்க்கலாம்.. முழு விபரம்

கடந்த சீசன்களை விட தற்போதைய சீசனில் ஆடுகளம் பந்துவீச்சுக்கு நன்றாக ஒத்துழைக்கின்ற காரணத்தினால், போட்டிகள் இறுதிவரை செல்வதும், திறமையான பேட்டிங் வெளிப்படுகின்ற காரணத்தினாலும் அதிக சுவாரசியமாக மாறி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.