உலக லெஜெண்ட்ஸ் தொடர்.. இந்திய செமி பைனல் அட்டவணை.. எந்த சேனலில் பார்க்கலாம்.. முழு விபரம்

0
4895

உலக சாம்பியன்ஷிப் லெஜன்ட் கிரிக்கெட் தொடர் 2024 சீசன் தற்போது அதன் இறுதிக் கட்டத்தை எட்டி இருக்கிறது.

இதன் அரையிறுதி போட்டிகளில் பங்குபெறும் நான்கு அணிகள், விளையாடும் மைதானம்,தொலைக்காட்சி ஒளிபரப்பு உள்ளிட்ட தகவல்கள் வெளிவந்துள்ளன.

- Advertisement -

ஓய்வு பெற்ற முன்னாள் ஜாம்பவான் வீரர்கள் பங்குபெறும் உலக சாம்பியன்ஷிப் லெஜன்ட் 2024 லீக் கிரிக்கெட் தொடரில் மொத்தம் இந்தியா சாம்பியன்ஸ், பாகிஸ்தான் சாம்பியன்ஸ், வெஸ்ட் இண்டீஸ் சாம்பியன்ஸ், சவுத் ஆப்பிரிக்கா சாம்பியன்ஸ், ஆஸ்திரேலியா சாம்பியன்ஸ், இங்கிலாந்து சாம்பியன்ஸ் என ஆறு அணிகள் பங்கேற்றன. இதில் தற்போது நான்கு அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.

5 போட்டிகளில் விளையாடி நான்கு போட்டிகளில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் முதல் இரண்டு இடங்களை பிடித்துள்ள நிலையில், வெஸ்ட் இண்டீஸ் சாம்பியன்ஸ் அணி இரண்டு வெற்றிகளை பெற்று மூன்றாவது இடத்திலும், இந்தியா சாம்பியன்ஸ் அணி இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றிருந்தாலும் ரன் ரேட்டில் குறைவாக இருப்பதால் நான்காவது இடத்தையும் பெற்றுள்ளது. முதல் இடத்தில் உள்ள அணி நான்காவது அணியோடும், இரண்டாவது இடத்தில் உள்ள அணி மூன்றாவது அணியோடும் மோதும் வகையில் அரை இறுதிப் போட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த சூழ்நிலையில் இந்த நான்கு அணிகள் மோதும் போட்டிகள் குறித்த முழு தகவல் வெளிவந்துள்ளது. இதன் முதல் அரை இறுதி போட்டி ஜூலை 12ஆம் தேதி நார்த்தாம்டனில் உள்ள கவுண்டி கிரிக்கெட் மைதானத்தில் பாகிஸ்தான் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டி உள்ளூர் நேரப்படி பிற்பகல் 12.30 மணிக்கும், இந்திய நேரப்படி மாலை 5 மணிக்கு நடைபெற உள்ளது. இதில் வெற்றி பெறும் அணியே முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும்.

- Advertisement -

அதே நாள், அதே மைதானத்தில் நடைபெறும் மற்றொரு போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இரண்டாவது அரையிறுதி போட்டியில் மோத உள்ளன. இந்தப் போட்டியானது உள்ளூர் நேரப்படி மாலை 4.30 மணிக்கும், இந்திய நேரப்படி இரவு 9.30 மணிக்கு நடைபெற உள்ளது. இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி இரண்டாவது அணியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும். இந்தப் போட்டிகள் அனைத்துமே ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகின்றன.

இதையும் படிங்க:இந்திய அணிக்கு இந்த மாதிரி வசதிகள் எல்லாம் செஞ்சு வச்சுருக்கோம்.. பாகிஸ்தான் வாங்க – வாசிம் அக்ரம் வேண்டுகோள்

அதே நேரத்தில் இணையதளத்தில் ஃபேன் கோட் ஆப் மூலமாக நேரடியாக லைவ் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது. இதில் குறிப்பாக இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் போட்டி இரண்டு நாட்டு ரசிகர்கள் இடையேயும் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.