“2024 டி20 உலககோப்பை.. இந்திய அணியில் இந்த 4 ஃபாஸ்ட் பவுலர்ஸ் கட்டாயம் இருக்க வேண்டும்” – ஜாகிர் கான் தேர்வு

0
234
Zaheer

2004 ஆம் ஆண்டு இந்தியாவில் ஐபிஎல் தொடர் முடிந்து ஜூன் மாதம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் டி20 உலகக்கோப்பை தொடர் நடைபெற இருக்கிறது.

இந்திய அணி இந்த உலகக் கோப்பை தொடருக்கு முன்பான சர்வதேச டி20 தொடரை நேற்று ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடி முடித்துவிட்டது. இதற்கு அடுத்து இந்திய அணிக்கு எந்த சர்வதேச டி20 தொடரும் கிடையாது.

- Advertisement -

மேலும் நடந்து முடிந்த ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடருக்கு வேகப்பந்துவீச்சாளர்களாக அர்ஸ்தீப் சிங், முகேஷ் குமார் மற்றும் ஆவேஸ் கான் ஆகியோர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டார்கள். மேலும் ப்ளேயிங் லெவனில் இரண்டு வேகப்பந்துவீச்சாளர்களுக்கு மட்டுமே வாய்ப்பு கொடுக்கப்பட்டது. மூன்றாவது வேகப்பந்து வீச்சாளராக சிவம் துபே இருந்தார்.

இந்த நிலையில் டி20 உலகக்கோப்பை தொடருக்கு இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர்களாக யார் யார் இருப்பார்கள் என்கின்ற கேள்வி இருக்கிறது. இதில் தற்போதைக்கு பும்ரா பெயர் மிக அழுத்தமாக எழுதப்பட்டிருக்கிறது. மற்றவர்கள் யார்? என்பதுதான் கேள்வி.

தற்பொழுது இதுகுறித்து இந்திய அணியின் வேகப்பந்துவீச்சு லெஜன்ட் முன்னாள் வீரர் ஜாகிர் கான் கூறும் பொழுது ” நீங்கள் பும்ரா மற்றும் சிராஜை நிச்சயம் டி20 உலக கோப்பை இந்திய அணியில் பார்ப்பீர்கள் என்று நினைக்கிறேன். இவர்களுக்கு அடுத்து அர்ஸ்தீப் சிங் இருப்பார். ஏனென்றால் அவர் ஒரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர். எனவே அவரிடமிருந்து இந்த ஒரு மாறுபாடு நமக்கு கிடைக்கும்.

- Advertisement -

இதற்கடுத்து நான் நான்காவது வேகப்பந்துவீச்சாளராக முகமது ஷமியை பார்க்கிறேன். அவர் உடல் தகுதியோடு இருந்தால் உங்களுக்கு டி20 உலகக்கோப்பையில் நிச்சயம் அவர் ஒரு எக்ஸ்பேக்டராக இருப்பார். நான் இந்த நான்கு வேகப் பந்துவீச்சாளர்களையும் தேர்வு செய்கிறேன். ஏனென்றால் கட்டாயம் நான்கு வேகப்பந்துவீச்சாளர்கள் தேவை” என்று கூறியிருக்கிறார்.

ஜாகிர் கான் உடன் இந்த உரையாடலில் இருந்த பிரகியான் ஓஜா கூறும் பொழுது “ஜாகிர் கான் சொல்லி இருப்பது முற்றிலும் சரி. நானும் இதையே ஆமோதிக்கிறேன். பும்ரா மற்றும் சிராஜ் இருப்பார்கள் என்றால் உங்களுக்கு ஒரு இடதுகை வேகப்பந்து வீச்சாளர் தேவை. அவர் அர்ஸ்தீப்பாக இருப்பார். ஷமி உடல் தகுதியுடன் இருந்தால் அவர் நிச்சயம் டி20 உலகக் கோப்பை இந்திய அணியில் இருக்க வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.