சூப்பர்-8 சுற்று.. இந்திய அணி மோதும் அணிகள்.. இடம் மற்றும் தேதி.. முழு உத்தேச விபரங்கள்

0
1125
ICT

தற்போது 9வது டி20 உலகக்கோப்பை தொடரின் முதல் சுற்று மிக வேகமாக இறுதிக்கட்டத்தை எட்டி வருகிறது. இதற்கு அடுத்து நடைபெற இருக்கும் சூப்பர் 8 சுற்றில் மோதிக் கொள்ளும் அணிகளின் விபரங்கள் ஓரளவுக்கு தெரிய வந்திருக்கின்றன. குறிப்பாக இந்திய அணியிடம் பெரும் குழுவில் எந்தெந்த அணிகள் வரும் என்பது தெளிவாகி இருக்கிறது.

இந்திய அணி இடம்பெறும் குழுவில், பி பிரிவில் இரண்டாவது இடம் பிடிக்கும் அணியான ஆஸ்திரேலியா, சி பிரிவில் முதல் இடம் பிடிக்கும் ஆப்கானிஸ்தான் மற்றும் டி பிரிவில் இரண்டாவது இடம் பிடிக்கும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் இடம்பெறுவது உறுதியாகி இருக்கிறது.

- Advertisement -

நேற்று நெதர்லாந்து அணிக்கு எதிராக பங்களாதேஷ் அணி வெற்றி பெற்றது. பங்களாதேஷ் மூன்று ஆட்டங்களில் இரண்டு வெற்றி, நெதர்லாந்து மூன்று ஆட்டங்களில் ஒரு வெற்றி பெற்று இருக்கின்றன. மேலும் பங்களாதேஷ் அணிக்கு நேபாள் அணியுடனும், நெதர்லாந்து அணிக்கு இலங்கை அணி உடனும் ஒரு போட்டி எஞ்சி இருக்கின்றன. மேலும் பங்களாதேஷ் ரன் ரேட் +0.478 என்றும், நெதர்லாந்து ரன் ரேட் -0.408 என்றும் இருக்கிறது. எனவே பங்களாதேஷ் டி பிரிவில் அடுத்த சுற்றுக்கு முன்னேறுவது ஏறக்குறைய உறுதியானதாக தெரிகிறது.

மற்றபடி ஆஸ்திரேலியா அணி மூன்று போட்டிகளில் மூன்று போட்டிகளையும் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறிவிட்டது. இதே போல இன்று நடைபெற்ற போட்டியில் பப்புவா நியூ கினியா அணியை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அணியும் அதிகாரப்பூர்வமாக அடுத்த சுற்றுக்கு முன்னேறி விட்டது. இந்த இரண்டு அணிகளும் இந்திய அணி இடம் பெறும் குழுவில் இடம் பெறுகின்றன. மூன்றாவது அணியாக பங்களாதேஷ் எப்படியும் வந்துவிடும்.

- Advertisement -

இந்திய அணி சூப்பர் 8 சுற்றில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான முதல் போட்டியில் ஜூன் 20ம் தேதி பார்படாஸ் மைதானத்தில் விளையாடுகிறது. பங்களாதேஷ் அணிக்கு எதிரான 2வது போட்டியில் ஜூன் 22ம் தேதி ஆண்டிகுவா மைதானத்தில் விளையாடுகிறது. ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது போட்டியில் செயின்ட் லூசியா மைதானத்தில் ஜூன் 24ஆம் தேதி விளையாடுகிறது.

இதையும் படிங்க : 15.1 ஓவர்.. ஆப்கானிஸ்தான் ஹாட்ரிக் வெற்றி.. அடுத்த சுற்றுக்கு தகுதி.. நியூசி வெளியேறியது

இந்தச் சுற்றில் ஒரு அணி தான் விளையாடும் மூன்று போட்டிகளில் குறைந்தபட்சம் இரண்டு போட்டிகளை வென்றால்தான் அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இன்னொரு பிரிவில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறி இருக்கின்றன. மேலும் இரண்டு இடங்களுக்கு இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, பாகிஸ்தான், அமெரிக்கா என நான்கு அணிகள் போட்டியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -