2024 ஆம் வருட டி20 உலக கோப்பை ஜூன் மாதம் 4 தேதி தொடங்கி 30 தேதி வரை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் வைத்து நடைபெற இருக்கிறது. 20 அணிகள் பங்கு பெற இருக்கும் இந்த உலகக் கோப்பை தொடரில் 20 அணிகள் நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்பட இருக்கின்றன.
ஒன்பதாவது டி20 உலக கோப்பையை கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்தியா அணி 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பையில் அரை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா இங்கிலாந்திடம் தோல்வி அடைந்து வெளியேறியது . இந்தப் போட்டிக்குப் பிறகு இந்திய அணியின் முன்னணி வீரர்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி டி20 போட்டியில் தொடர்ந்து விளையாடவில்லை.
2024 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பையை கருத்தில் கொண்டு அவர்கள் இருவரும் 50 ஓவர் உலகக் கோப்பைக்கு பிறகு டி20 போட்டிகளில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சமீபத்தில் நடந்து முடிந்த ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டி20 போட்டியிலும் பங்கேற்கவில்லை மேலும் தற்போது தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணம் சென்றிருக்கும் இந்திய அணியின் டி20 அணிலும் இடம் பெறவில்லை.
இதனால் விராட் கோலி 2024 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பையில் விளையாடுவாரா என்ற சந்தேகம் ரசிகர்களுக்கு எழுந்திருக்கிறது. இது பற்றி அதிர்ச்சியான தகவல் ஒன்றும் வெளியாகி இருக்கிறது. அதாவது 2024 ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டிகளில் இந்திய அணி இளம் வீரர்களுடன் களம் இறங்க இருப்பதாக அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன . இதனால் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா போன்ற முன்னணி வீரர்கள் அணியில் சேர்க்கப்படாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவும் அந்த தகவல்கள் தெரிவித்துள்ளன.
டி20 போட்டிகளில் விராட் கோலியின் மூன்றாவது இடத்தில் இஷான் கிஷான் விளையாட இருப்பதாகவும் இந்தியா நிக்கி நெருக்கமான வட்டாரங்களில் இருந்து தகவல் வந்திருக்கிறது. கடந்த 2022 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பையில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் விராட் கோலி முதலிடம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தற்போது நடந்து முடிந்த 50 ஓவர் உலகக் கோப்பை போட்டிகளிலும் அவர்தான் அதிக ரன்கள் வைத்திருக்கிறார்.
எனினும் உலகக்கோப்பை போட்டிகளில் இந்தியா இளம்பிரர்களைக் கொண்ட அணியை களம் இறக்க இருப்பதாகவும் இதனால் ஒரு விராட் கோலிக்கு வாய்ப்பு வழங்கப்படாமல் போகலாம் எனவும் அந்த தகவல்கள் தெரிவித்துள்ளன. நடைபெற இருக்கும் ஐபிஎல் தொடர்களில் அவரது விளையாட்டை பார்த்த பின்பு உலகக்கோப்பை அணி பற்றிய இறுதி முடிவு எட்டலாம் எனவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
மேலும் 2024 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் விராட் கோலி துவக்க வீரராக களம் இறங்க மாட்டார் என்ற ஒரு தகவலும் வெளியாகி இருக்கிறது. விராட் கோலி இதுவரை 27 டி20 உலக கோப்பை போட்டிகளில் விளையாடி 1147 ரன்கள் சேர்த்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.