“2024.. அடுத்த வருஷம் இந்த இந்திய வீரருக்குதான் பெஸ்ட்டா இருக்கும்!” – நாசர் ஹுசைன் தேர்வு!

0
274
Virat

நடப்பு 2023 ஆம் ஆண்டு முடிவடைய இன்னும் ஒரு நாள் மீதம் இருக்கிறது. உலகம் அடுத்த சில மணி நேரங்களில் அடுத்த வருடத்திற்குள் நுழைய இருக்கிறது.

இந்த வருடத்தில் கிரிக்கெட் உலகத்தில் எடுத்துக் கொண்டால் இளம் வீரர்கள் பலர் வந்திருக்கிறார்கள். நிறைய பெரிய கிரிக்கெட் நாடுகளில் பெரிய வீரர்கள் இடம்பெற்று இருந்தாலும் கூட, எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இளம் வீரர்கள் பலர் வாய்ப்பைப் பெற்று விளையாடுகிறார்கள்.

- Advertisement -

இந்த வகையில் இந்திய கிரிக்கெட்டில் இளம் இடதுகை பேட்ஸ்மேன்கள் திலக் வர்மா, ஜெய்ஸ்வால், ரிங்கு சிங், சாய் சுதர்சன் என ஒரு பேட்டிங் யூனிட்டில் எல்லா இடங்களிலும் விளையாடும் பேட்ஸ்மேன்கள் வந்திருக்கிறார்கள். வலதுகை வீரராக ரஜத் பட்டிதார் மற்றும் ஜிதேஷ் ஷர்மா இறுதியாக அறிமுகமாகி இருந்தார்கள்.

ஆனால் வழக்கம்போல் இந்த ஆண்டு இந்திய கிரிக்கெட்டில் மிகச்சிறந்த பேட்ஸ்மேனாக விராட் கோலியே வெளிப்பட்டு இருக்கிறார். அவருக்கு அடுத்த இடத்தில் சுப்மன் கில் இருக்கிறார். அடுத்த வருடம் யாருக்கு சிறப்பாக அமையும் என்று ஐசிசி தரப்பில் பேசியுள்ள இங்கிலாந்து முன்னாள் கேப்டன் நாசர் உசேன் இரண்டு வீரர்களை தேர்ந்தெடுத்து இருக்கிறார்.

இதுகுறித்து அவர் கூறும் பொழுது “விராட் கோலி என்னுடைய முதல் மெகா ஸ்டார். இதில் எந்த சந்தேகமும் கிடையாது. அவர் 2023 ஆம் ஆண்டில் மிகச் சிறப்பான ஒரு உலகக் கோப்பையை கொண்டு இருந்தார். அவர் முறியடித்த சில மெகா சாதனைகளுக்கு மத்தியில், அவர் எவ்வளவு சிறப்பாக பேட்டிங் செய்தார் என்று யாரும் கவனிக்காமல் விட்டு விட்டார்கள்.

- Advertisement -

தொழில்நுட்ப ரீதியாக விராட் கோலியின் பேட்டிங்கை இதற்கு முன் நான் இப்படி பார்த்ததில்லை. நடந்து முடிந்த ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையில் இலங்கைக்கு எதிராகவும் அதேபோல மேலும் ஐந்து இன்னிங்ஸ்கள் சிறப்பானதாக அமைந்திருந்தது. இது விராட் கோலிக்கு நல்ல அறிகுறி. அவர் ஆட்டம் மற்றும் மனநிலையில் நல்ல முறையில் இருக்கிறார் என்று அர்த்தம்.

இவருக்கு அடுத்தபடியாக இவருடன் அடிக்கடி ஒப்பிடப்படும் பாபர் அசாம் தெரு இருக்கிறார். இவருக்கும் பாகிஸ்தான் அணிக்கும் வருகின்ற ஆண்டு மிகப் பெரியதாக இருக்கும். கேப்டன் பதவியில் இருந்து விலகி இருப்பதால் அவருக்கு நெருக்கடிகள் குறைவு.

இனி பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்காக அவர் செய்யக்கூடிய மிகப்பெரிய விஷயம் என்பது ரன்களை குவிப்பதுதான். பாகிஸ்தானுக்கு பாபர் அசாம் ரன்கள் தேவை. அடுத்த ஆண்டில் டி20 உலகக்கோப்பை வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் நடக்கிறது. கடந்த முறை அவர்கள் இறுதிப் போட்டிக்கு வந்தார்கள். இந்த நேரத்தில் மீண்டும் அவர்களுடைய முன்னாள் கேப்டனின் பேட்டிங் அவர்களுக்கு தேவை!” என்று கூறியிருக்கிறார்!