2024 ஐபிஎல் ; பிசிசிஐ கொண்டு வந்துள்ள மாஸான புதிய ரூல்; இனி எதுவும் ஈசி கிடையாது!

0
1362
BCCI

இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு மிகப்பெரிய அளவில் வருமானத்தை கொடுத்து வரும் ஐபிஎல் டி20 தொடரின் தரத்தை அதிகரிக்க பந்துவீச்சாளர்களுக்கும் பேட்ஸ்மேன்களுக்கும் இடையே போட்டியை அதிகரிக்கும் வேலைகளை பிசிசிஐ செய்து வருகிறது!

இந்த வருட ஐபிஎல் தொடரில் இம்பேக்ட் பிளேயர் என்ற புதிய விதியை கொண்டு வந்தது. மேலும் டாஸ் எப்படி விழுகிறதோ அதற்கு ஏற்றார் போல அணியைக் களம் இறக்கிக் கொள்ள இரண்டு விதமான பிளேயிங் லெவனை கொடுக்கலாம் என்று இன்னொரு விதியையும் கொண்டு வந்தது.

- Advertisement -

இந்த இரண்டு விதிகளின் காரணமாக ஆட்டத்தில் போட்டித் தன்மை அதிகரித்தது. மேலும் போட்டியின் வெற்றியில் அதிகபட்ச பங்காற்றி வந்த டாஸ் இந்த முறை அதன் வீரியத்தை இழந்தது. இரண்டாவதாக பந்து வீசக்கூடிய அணிகளும் அதிகப்படியான வெற்றிகளை பெற்றன.

இந்த விதிகளை பிசிசிஐ கடந்த வருடமே கொண்டு வந்து இந்திய உள்நாட்டு டி20 தொடரான சையத் முஸ்தாக் அலி டிராபியில் செயல்படுத்தி பார்த்தது. அந்தத் தொடரில் இம்பக்ட் பிளேயர் என்பவர் 14 வது ஓவருக்கு பிறகு தான் வரவேண்டும் என்று இருந்தது. அதை ஐபிஎல் க்கு கொண்டு வரும் பொழுது எப்போது வேண்டுமானாலும் என்று மாற்றிக் கொண்டது.

ஜூலை ஏழாம் தேதி மும்பையில் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் 19 ஆவது அபெக்ஸ் குழுக்கூட்டம் நடைபெற்றது. இதில் சில முக்கியமான விஷயங்கள் அலசப்பட்டன. மேலும் உள்நாட்டில் அக்டோபர் நவம்பர் மாதத்தில் நடைபெற இருக்கும் சையத் முஸ்தாக் அலி தொடரில் கொண்டுவரப்படுவதற்கான புதிய விதிமுறைகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன.

- Advertisement -

இதன்படி ஐபிஎல் தொடரில் இம்பேக்ட் பிளேயர் விதியை எப்பொழுது வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் என்பது போல சையது முஸ்தாக் அலி தொடரிலும் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் ஐபிஎல் தொடர் போலவே இரண்டு விதமான பிளேயிங் லெவனை கொடுக்கவும் முடிவு செய்யப்பட்டு இருக்கிறது.

இது மட்டும் இல்லாமல் புதிய ஒரு விதியாக, ஒரு ஓவருக்கு இரண்டு பவுன்சர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்கின்ற விதி கொண்டுவரப்பட இருக்கிறது. இதன் மூலம் போட்டி பேட்ஸ்மேன்களுக்கு மட்டுமே சாதகமாக இருக்காமல் பேட்ஸ்மேன்கள் மற்றும் பந்துவீச்சாளர்களுக்கு இடையே போட்டி தன்மை சமமாக இருக்க உதவி செய்யும்.

தற்பொழுது இந்த புதிய விதியை சையது முஸ்தாக் அலி டிராபியில் பிசிசிஐ செயல்படுத்தி பார்க்கிறது. அங்கு இந்த விதி எப்படி செயல்படுகிறது என்பதை பொறுத்து 2024 ஐபிஎல் தொடரில் கொண்டு வரப்படும் என்பது, ஏற்கனவே பிசிசிஐ இதே முறையில் செயல்பட்டு உள்ளதை வைத்து புரிந்து கொள்ளலாம். எனவே இந்த விதி ஐபிஎல் தொடருக்கு கொண்டுவரப்பட்டால் அது பந்துவீச்சாளர்களுக்கு கொண்டாட்டமான ஒன்றாகவே இருக்கும். மேலும் போட்டித் தன்மை சமநிலையில் இருக்கும்!