வெளியானது 2024 ஐபிஎல் அட்டவணை.. பிசிசிஐ வைத்த முக்கியமான ட்விஸ்ட்.. முதல் போட்டியில் சிஎஸ்கே ஆர்சிபி

0
315
Ipl2024

உலகின் NO.1 பிரான்சிசைஸ் டி20 கிரிக்கெட் லீக் ஆன இந்திய கிரிக்கெட் வாரியம் 16 ஆண்டுகளாக வெற்றிகரமாக நடத்தி வரும் ஐபிஎல் டி20 லீக்கின் 17ஆவது சீசனுக்கான அட்டவணை வெளியிடப்பட்டு இருக்கிறது.

ஆனால் இதில் ஒரு முக்கிய திருப்பமாக, முதல் 21 போட்டிகளுக்கான அட்டவணை மட்டுமே கொடுக்கப்பட்டிருக்கிறது. மீதமுள்ள போட்டிகளுக்கான அட்டவணை இரண்டாவது பாகமாக வெளியிடப்பட இருக்கிறது.

- Advertisement -

இந்த வருடம் ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் இந்தியா முழுக்க நாடாளுமன்ற தேர்தல் நடக்க இருக்கின்ற காரணத்தினால், தேர்தல் எந்தெந்த மாநிலங்களில் எந்தெந்த தேதிகளில் நடக்கிறது என்பதை பார்த்து, அதைப் பொறுத்து ஐபிஎல் தொடரின் இரண்டாவது அட்டவணையை வெளியிட ஐசிசி முடிவு செய்திருக்கிறது.

வழக்கமாக மார்ச் மாதம் இறுதியில் ஐபிஎல் தொடர் தொடங்குவது சில ஆண்டுகளாக வழக்கத்தில் இருந்து வருகிறது. ஆனால் இந்த ஆண்டு மார்ச் 22 ஆம் தேதியே ஐபிஎல் தொடர் தொடங்குகிறது. இதற்கு தேர்தல் ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது.

மார்ச் மாதம் 22 ஆம் தேதி வெள்ளிக்கிழமை துவங்கும் ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் முதலில் மோதிக் கொள்கின்றன. மாலையில் துவங்கும் போட்டிகள் 6.30 மணிக்கு ஆரம்பிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இதற்கடுத்து சனிக்கிழமை இரண்டு போட்டிகள் நடைபெறுகிறது. மதியம் 2.30 மணிக்கு துவங்கும் போட்டியில் மொகாலி மைதானத்தில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதிக் கொள்கின்றன. மாலை 6:30 மணிக்கு துவங்கும் இரண்டாவது போட்டியில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன.

இதற்கடுத்த ஞாயிற்றுக்கிழமையும் இரண்டு போட்டிகள் நடைபெறுகின்றன. மதியம் 2.30 மணிக்கு துவங்கும் முதல் போட்டியில் ஜெய்ப்பூர் மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணிகள் மோதிக் கொள்கின்றன. மாலை 6.30 மணிக்கு துவங்கும் இரண்டாவது போட்டியில் குஜராத் அகமதாபாத் மைதானத்தில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதிக் கொள்கின்றன.

மார்ச் 22 ஆம் தேதி துவங்கிய ஏப்ரல் 7-ம்தேதி முடிய, மொத்தம் 21 போட்டிகளுக்கான அட்டவணைகள் மட்டுமே கொடுக்கப்பட்டிருக்கிறது. மேலும் முதல் வாரத்தில் மட்டுமே சனிக்கிழமை 2 போட்டிகள் நடைபெறுகிறது. இதற்கு அடுத்து கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையில் வரும் இரண்டு சனிக்கிழமையில் ஒரு போட்டி மட்டுமே நடைபெறுகிறது. ஞாயிற்றுக்கிழமை வழக்கம் போல் இரண்டு போட்டிகள் நடைபெறுகின்றன. முழு அட்டவணைக்கான ட்விட்டர் லிங்க் கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது.