2024..ஆப்கான் முதல் இங்கிலாந்து வரை.. முதல் 3 மாத இந்திய அணியின் முழு போட்டி அட்டவணைகள்

0
2970

2024 ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களுக்கான இந்திய அணியின் போட்டி அட்டவணையை வெளியிட்டுள்ளது பிசிசிஐ. ஜனவரி 3ஆம் தேதி இந்திய அணி தென்னாப்பிரிக்காவுடன் கடைசி மற்றும் இறுதி டெஸ்ட் போட்டியில் மோதுகிறது. அதற்குப் பிறகு இந்திய அணி எதிர்கொள்ளும் போட்டிகளை பின்வரும் அட்டவணைகளில் காணலாம்.

2023ஆம் ஆண்டு இந்திய அணிக்கு ஒரு சில கசப்பான ஆட்டங்களை தவிர நல்ல ஆண்டாக அமைந்தது என்று சொல்லலாம். இந்திய அணி தென்னாபிரிக்காவின் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு பிறகு இந்தியாவில் அதிக போட்டிகளை நடத்த திட்டமிட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க இருக்கிறது. உலகக்கோப்பை டி20 தொடருக்கு தயாராகும் வகையில் உதவியாக இருக்கும்.

- Advertisement -

அதற்குப்பின் இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து போட்டிகள் கொண்ட உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்க இருக்கிறது. இது ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை நடத்த திட்டமிட்டுள்ளது. சொந்த மண்ணில் தொடர் நடைபெறுவதால் இந்திய அணிக்கு டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் முன்னேற நல்ல வாய்ப்பாக அமையும்.

மார்ச், ஏப்ரல், மே எனும் மூன்று மாதங்களில் இந்திய அணி வீரர்கள் ஐபிஎல் தொடரில் பங்கேற்க உள்ளனர். அதற்குப் பின்னர் இந்திய அணி ஜூன் 2024 இல் நடைபெறும் டி20 உலகக்கோப்பையை வெஸ்ட் இண்டீஸ்ல் பங்கேற்க இருக்கிறது.

ஜூலை மாதம் இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று ஒரு நாள் போட்டி மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது. அதற்குப் பிறகு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் ஒரு பகுதியாக பங்களாதேஷ் அணியை உள்நாட்டில் எதிர்கொள்கிறது. பங்களாதேஷ் அணியுடன் இரண்டு டெஸ்ட் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் பங்கே இருக்கிறது.

- Advertisement -

அக்டோபரில் இந்திய அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்க இருக்கிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் நடைபெற உள்ளது அதற்கு முன்னர் இந்திய அணி ஆஸ்திரேலிய ஒரு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்டரில் மோத உள்ளது. முதல் மூன்று மாதங்களுக்கான இந்திய அணி எதிர்கொள்ளும் போட்டித் தொடர் அட்டவணையை காணலாம்.

இந்தியாவின் தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணம்

ஜனவரி 3 – இரண்டாவது டெஸ்ட், கேப்டவுன் (பிற்பகல் 2 மணி)

ஆப்கானிஸ்தானின் இந்திய சுற்றுப்பயணம்

ஜனவரி 11 – முதல் டி20I, மொஹாலி (இரவு 7 மணி மணி )

ஜனவரி 14 – இரண்டாவது டி20I, குவாலியர் (இரவு 7 மணி மணி )

ஜனவரி 17 – மூன்றாவது டி20, பெங்களூரு (இரவு 7 மணி)

இங்கிலாந்தின் இந்திய சுற்றுப்பயணம்

ஜனவரி 25 – முதல் டெஸ்ட், ஹைதராபாத் (காலை 9:30 மணி)

பிப்ரவரி 2 – இரண்டாவது டெஸ்ட், விசாகப்பட்டினம் (காலை 9:30 மணி )

பிப்ரவரி 15 – மூன்றாவது டெஸ்ட், ராஜ்கோட் (காலை 9:30 மணி)

பிப்ரவரி 23 – நான்காவது டெஸ்ட், ராஞ்சி (காலை 9:30 மணி)

மார்ச் 7 – ஐந்தாவது டெஸ்ட், தர்மசாலா (காலை 9:30 மணி)