63 வருட வரலாறு.. ருதுராஜ் அணிக்காக மும்பை வீரர் சாதனை.. ஈஸ்வரன் தனியாளாக போராட்டம்.. துலீப் ட்ராபி 2024

0
113
Anshul

நடப்பு துலீப் டிராபி தொடரில் ருதுராஜ் தலைமை தாங்கும் இந்தியா சி அணிக்காக இந்தியா பி அணிக்கு எதிரான போட்டியில் மும்பை வீரர் அன்சூல் காம்போஜ் பந்துவீச்சில் அசத்தலான சாதனை ஒன்றை படைத்திருக்கிறார்.

ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் முதலில் டாசியில் வெற்றி பெற்ற இந்தியா பி அணியின் கேப்டன் அபிமன்யு ஈஸ்வரன் முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தார். இரண்டு அணிகளுமே தங்களது முதல் சுற்றில் வெற்றி பெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இஷான் கிஷான் அசத்தல்

முதலில் பேட்டிங் செய்த இந்தியா சி அணிக்கு விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் இஷான் கிஷான் அதிரடியாக விளையாடும் 111 ரன்கள் குவித்தார். மேலும் மானவ் சுதார் 82 பாபா இந்திரஜித் 78 ரன்கள் எடுத்தார்கள். இந்தியா சி அணி முதல் இன்னிங்ஸில் 525 ரன்கள் குவித்தது.

இதைத்தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸை விளையாடிய இந்தியா பி அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்களில் தமிழகத்தின் நாராயணன் ஜெகதீசன் 137 பந்துகளில் 70 ரன்கள் எடுத்தார். மற்றும் முன்னணி பேட்ஸ்மேன்கள் யாரும் பெரிய ரன்கள் எடுக்கவில்லை. அதே சமயத்தில் இன்னொரு தொடக்க ஆட்டக்காரரும் கேப்டனுமான அபிமன்யு ஈஸ்வரன் தனியாளாக போராடி 284 பந்துகளில் 157 ரன்கள் குவித்தார்.அந்த அணி 332 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.

- Advertisement -

அன்சூல் காம்போஜ் சாதனை

இந்தியா சி அணியின் பந்துவீச்சில் மும்பை மாநில வலதுகை வேகப்பந்து வீச்சாளர் அன்சூல் காம்போஜ் 27.5 ஓவர்கள் பந்துவீசி 8 மெய்டன்களுடன் 69 ரன்கள் மட்டுமே கொடுத்து எட்டு விக்கெட் கைப்பற்றி அசத்தினார். மேல் வரிசையில் முக்கிய விக்கெட்டுகளையும் கீழ் வரிசையில் மொத்தமாகவும் எல்லோரையும் வெளியேற்றி இந்தியா பி அணியின் இன்னிங்ஸை முடிவுக்கு கொண்டு வந்தார்.

இதையும் படிங்க : இந்திய அணியில் இவர் மூளைகிட்ட மோதறது கஷ்டம்.. இந்த முறை வரட்டும் வெயிட் பண்றேன் – கவாஜா பாராட்டு

1961 ஆம் ஆண்டு முதன் முதலில் துலீப் டிராபி துவங்கப்பட்டது. அதிலிருந்து தற்போது வரை 63 வருடங்களில் துலீப் டிராபி வரலாற்றில் டெபாசிஸ் மொகந்தி 10/46, அசோக் டின்டா 8/123 என இருவர் மட்டுமே ஒரு இன்னிங்ஸில் எட்டு விக்கெட் தாண்டி எடுத்திருந்தார்கள். இந்த வரிசையில் மூன்றாவது வீரராக தற்போது அன்சூல் காம்போஜ் இணைந்து சாதனை படைத்திருக்கிறார்

- Advertisement -