முதல் 9 ஓவரில் சதம் அடித்த வீரர்.. வார்னர் அணி பிக் பாஷ் பைனலில் தோல்வி.. ஹோபர்ட் ஹரிகேன்ஸ் சாம்பியன்

0
524
Warner

2024-25 ஆம் ஆண்டுக்கான ஆஸ்திரேலிய டி20 லீக் பிக் பாஷ் தொடரின் இறுதிப் போட்டியில் டேவிட் வார்னரின் தலைமையிலான சிட்னி தண்டர் அணிக்கு எதிராக ஹோபர்ட் ஹரிகேன்ஸ் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி இருக்கிறது.

ஆஸ்திரேலியா அணியின் சர்வதேச போட்டிகளுக்கு இடையே ஆஸ்திரேலியாவின் பிரான்சிஸைஸ் டி20 லீக்கான பிக் பாஷ் தொடர் இரண்டு வருடங்களுக்கு இடையில் நடைபெறுகிறது. இந்த முறை நடைபெற்ற தொடரின் இறுதிப் போட்டிக்கு சிட்னி தண்டர் மற்றும் ஹோபர்ட் அறிக்கேன் அணிகள் தகுதி பெற்றன.

- Advertisement -

டேவிட் வார்னர் சிறப்பான தொடக்கம்

இந்த இறுதி போட்டியில் டாஸ் வென்ற ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்ய வந்த சிட்னி தண்டர் அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் ஜேசன் சங்கா 42 பந்தில் 67 ரன்கள், இன்னொரு தொடக்க ஆட்டக்காரரும் கேப்டனுமான டேவிட் வார்னர் 32 பந்தில் 48 ரன்கள் என அதிரடியான தொடக்கத்தை கொடுத்தார்கள்.

இதைத்தொடர்ந்து சிட்னி தண்டர் அணியில் மற்ற பேட்ஸ்மேன்கள் இந்த தொடக்கத்தை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ளவில்லை. இவர்களுக்கு அடுத்தபடியாக ஒலிவர் டேவிஸ் 19 பந்தில் 26 ரன்கள், சாம் பில்லிங்ஸ் 14 பந்தில் 20 ரன்கள் எடுத்தார்கள். சிட்னி தண்டர் அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் எடுத்தது.

- Advertisement -

39 பந்தில் மிரட்டல் சதம்

இதைத்தொடர்ந்து இலக்கை நோக்கி விளையாடிய ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணிக்கு தொடக்க ஆட்டக்காரர் மிட்சல் ஓவன் அதிரடியில் மிரட்டினார். வெறும் 39 பந்துகளை சந்தித்த அவர், போட்டியின் முதல் 9.4 ஓவரில் சதம் அடித்து எல்லோரையும் ஆச்சரியப்படுத்தினார். மொத்தமாக 42 பந்துகளை சந்தித்த அவர்
6 பவுண்டரிகள் மற்றும் 11 சிக்ஸர்கள் உடன் 108 ரன்கள் குவித்தார்.

இதையும் படிங்க : ஐபிஎல் மட்டும்தான் எனக்கு முக்கியம்.. வேறு எங்கும் ஆடமாட்டேன்.. இதுவே காரணம் – டிராவிஸ் ஹெட் பேட்டி

இவருக்கு அடுத்தபடியாக மேத்யூ வேட் 17 பந்தில் ஆட்டம் இழக்காமல் 32 ரன்கள் எடுக்க, ஹோபர்ட் ஹரிகேன்ஸ் 14.1 ஓவரில் மூன்று விக்கெட் இழப்புக்கு இலக்கை எட்டி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மேலும் 2024-25 ஆம் ஆண்டுக்கான பிக் பாஷ் தொடரில் சாம்பியன் பட்டத்தையும் வென்றது. ஆட்டநாயகனாக அதிரடி சதம் அடித்த மிட்சல் ஓவன் தேர்ந்தெடுக்கப்பட்டார். இது இவருக்கு இந்த தொடரில் இரண்டாவது சதம் என்பது குறிப்பிடத்தக்கது!

- Advertisement -