2023 உலகக் கோப்பை இந்த 4 அணிகள் அரை இறுதிக்கு வரும்; பாகிஸ்தான் வரனும் அப்போதான் இது நடக்கும் – கங்குலி கணிப்பு!

0
1020
Ganguly

இந்த ஆண்டு வருகின்ற அக்டோபர் நவம்பர் மாதங்களில் இந்தியாவில் வைத்து ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பைத் தொடர் முதல் முறையாக முழுமையாக நடத்தப்பட இருக்கிறது.

பத்து அணிகளைக் கொண்டு நடத்தப்படும், இந்த உலகக்கோப்பை தொடருக்கு இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா தென்னாபிரிக்கா பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் என எட்டு அணிகள் நேரடியாகத் தகுதி பெற்றன.

- Advertisement -

இதற்கு அடுத்து மீதி இரண்டு இடங்களுக்கான உலகக் கோப்பை தகுதி சுற்று போட்டிகள் ஜிம்பாப்வே நாட்டில் நடந்து வருகிறது. தற்பொழுது இதிலிருந்து இலங்கை மற்றும் நெதர்லாந்து அணிகள் ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கு தகுதி பெற்று இருக்கின்றன.

2023 ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் முதல் போட்டி அக்டோபர் ஐந்தாம் தேதி குஜராத் அகமதாபாத் மைதானத்தில் நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே துவங்குகிறது.

இதே மைதானத்தில் இந்திய அணி தனது மூன்றாவது ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை அக்டோபர் 15ஆம் தேதி எதிர்கொள்கிறது. மேலும் தனது முதல் ஆட்டத்தை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் அக்டோபர் எட்டாம் தேதி ஆஸ்திரேலியா அணியை எதிர்த்து மோதுகிறது.

- Advertisement -

இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் முன்னாள் தலைவருமான சவுரவ் கங்குலி எந்தெந்த அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும் என்று தனது கணிப்பை வெளியிட்டு இருக்கிறார்.

இதுகுறித்து அவர் கூறும் பொழுது
“இது மிகவும் கடினமான ஒரு வேலை. இந்தியா இங்கிலாந்து ஆஸ்திரேலியா 3 அணிகள் மற்றும் பெரிய போட்டிகளில் மிகச் சிறப்பாக செயல்படும் நியூசிலாந்து. ஆனால் இந்த இடத்தில் ஐந்தாவதாக ஒரு அணியையும் நான் சேர்க்க விரும்புகிறேன். நல்ல தரமான கிரிக்கெட் விளையாடி வரும் பாகிஸ்தானுக்கும் இடம் உண்டு. அரையிறுதி போட்டி கொல்கத்தா ஈடன் கார்டனில் நடப்பதால், இந்தியா பாகிஸ்தான் அணிகள் அரையிறுதியில் மோதினால் நன்றாக இருக்கும்!” என்று கூறியிருக்கிறார்.

மேலும் தொடர்ந்து பேசிய அவர்
“அழுத்தம் என்பது இந்திய அணிக்கு இருக்கும். அவர்கள் இதற்கு முன்பு விளையாடிய பொழுதும் இருந்தது. கடந்த உலகக் கோப்பையில் ரோகித் சர்மா ஐந்து சதங்கள் அடித்திருக்கிறார். அப்போதும் அவருக்கு அழுத்தம் இருந்திருக்க வேண்டும் என்று நான் நம்புகிறேன்.

இது ஒரு பிரச்சனை கிடையாது. அவர்கள் வெற்றிக்கான வழியை கண்டுபிடிப்பார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன். ராகுல் டிராவிட் விளையாடிய காலங்களில் சிறப்பாக செயல்பட வேண்டிய அழுத்தம் இருந்தது. இப்போது அவர் தலைமை பயிற்சியாளராக இருப்பதால் சிறப்பாக விளையாட வேண்டிய அழுத்தத்தை தர வேண்டிய இடத்தில் இருக்கிறார். இப்படி அழுத்தம் என்பது போகாது இது ஒரு பிரச்சனை கிடையாது” என்று கூறியிருக்கிறார்!