2023 உலக கோப்பை தகுதி சுற்று; இலங்கை ஜிம்பாப்வே ஸ்காட்லாந்து நெதர்லாந்து உள்ளே வர என்ன வாய்ப்பு?

0
2289
Odiwc2023

இந்தியாவில் ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் அக்டோபர் நவம்பர் மாதத்தில் நடைபெற இருக்கிறது. இந்தியாவில் முதல்முறையாக முழுமையாக நடத்தப்படும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை இது என்பது குறிப்பிடத்தக்கது!

இந்த உலக கோப்பைக்கு போட்டியை நடத்தும் இந்தியா, நடப்பு சாம்பியன் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து ஆஸ்திரேலியா தென்னாபிரிக்கா, பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான், ஆகிய எட்டு அணிகள் நேரடியாக தகுதி பெற்றன!

- Advertisement -

பத்து அணிகளைக் கொண்டு ரவுண்ட் ராபின் முறையில் நடத்தப்படும் இந்த ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையில் மீதி இரண்டு அணிகளை கண்டறிவதற்கான தகுதிச்சுற்றுப் போட்டிகள் தற்பொழுது ஜிம்பாப்வே நாட்டில் நடைபெற்று வருகிறது.

இந்த உலகக் கோப்பை தகுதி சுற்றில் தற்பொழுது சூப்பர் சிக்ஸ் சுற்று நடைபெறுகிறது. லீக் சுற்றில் முடிவில் ஜிம்பாப்வே மற்றும் இலங்கை இரண்டு அணிகளும் தலா 4 புள்ளிகளை அடுத்த சுற்றுக்கு கொண்டு வந்தன. இதே போல ஸ்காட்லாந்து மற்றும் நெதர்லாந்து இரண்டு அணிகளும் தலா 2 புள்ளிகளை அடுத்த சுற்றுக்கு கொண்டு வந்தன. வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஓமன் சூப்பர் சிக்ஸ் வந்த தங்களுடைய குழுவில் இருந்த எந்த அணியையும் வெல்லாததால் எந்த புள்ளியையும் கொண்டு வரவில்லை.

இந்த நிலையில் நேற்று ஸ்காட்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் தோற்று வெஸ்ட் இண்டீஸ் அணி முதல்முறையாக ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை வரலாற்றில் விளையாட முடியாமல் வெளியேறி அதிர்ச்சி அளித்தது. இதே போல ஓமன் அணிக்கும் வாய்ப்பு முடிந்துவிட்டது.

- Advertisement -

இந்த நிலையில் தற்போது இலங்கை ஜிம்பாப்வே, ஸ்காட்லாந்து, நெதர்லாந்து, ஆகிய நான்கு அணிகளும், உலகக் கோப்பையில் விளையாடுவதற்கான இரண்டு அணிகளுக்கான போட்டியில் தொடர்கின்றன. இந்த நான்கு அணிகளும் தகுதி பெற வேண்டும் என்றால் என்ன நடக்க வேண்டும் என்று பார்ப்போம்.

இலங்கை:

இலங்கை முந்தைய சுற்றில் இருந்து நான்கு புள்ளிகளுடன் தற்போது சூப்பர் சிக்ஸ் சுற்றில் ஒரு போட்டியில் வென்று ஆறு புள்ளிகள் உடன் இருக்கிறது. இருந்தாலும் ஜிம்பாப்வே மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிரான இரண்டு போட்டிகள் மீதம் இருக்கிறது. இந்த இரண்டில் ஒரு போட்டியை வென்றால் கூட இலங்கை உலகக் கோப்பைக்கு தகுதி பெற்று விடும்.

ஜிம்பாப்வே:

இந்த அணியும் இலங்கைப் போலவே 6 புள்ளிகள் உடன் தற்பொழுது இருக்கிறது. சூப்பர் சிக்ஸ் சுற்றில் கடைசி இரண்டு ஆட்டத்தில் இலங்கை மற்றும் ஸ்காட்லாந்து அணிக்கு எதிராக விளையாட இருக்கிறது. இந்த இரண்டில் ஒரு போட்டியை வென்றாலும் இந்த அணியும் ரன் ரேட் அடிப்படையில் அடுத்த சுற்று நுழைவதற்கான அதிகபட்ச வாய்ப்பு இருக்கிறது.

ஸ்காட்லாந்து:

முந்தைய சுற்றில் இருந்து இரண்டு புள்ளிகளையும் சூப்பர் சிக்ஸ் சுற்றில் வெஸ்ட் இண்டீஸ் வீழ்த்தி இரண்டு புள்ளிகளையும் பெற்று நான்கு புள்ளிகள் உடன் இந்த அணி இருக்கிறது. இந்த அணி தனது கடைசி இரண்டு ஆட்டங்களை ஜிம்பாப்வே மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு எதிராக விளையாட இருக்கிறது, இந்த இரண்டு அணிகளையும் வீழ்த்தி ரன் ரேட் நல்ல முறையில் இருந்தால், இவர்களும் உலக கோப்பைக்கு தகுதி பெறலாம்.

நெதர்லாந்து:

இந்த அணியின் நிலைமையும் ஸ்காட்லாந்து அணியின் நிலைமையும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறது. எஞ்சியுள்ள இந்த அணியின் இரு ஆட்டங்கள் ஓமன் மற்றும் ஸ்காட்லாந்துக்கு எதிராக இருக்கிறது. எனவே இந்த அணி இரு போட்டிகளையும் வென்று எட்டு புள்ளிகளை பெறுவதற்கான அதிக வாய்ப்பில் இருக்கிறது. இலங்கை தன்னுடைய இரண்டு ஆட்டத்தில் தோற்றாலும், ஜிம்பாப்வே தன்னுடைய ஒரு ஆட்டத்தில் தோற்றாலும், அதே சமயத்தில் நெதர்லாந்து தான் இரு போட்டிகளையும் நல்ல முறையில் வென்று நல்ல ரன்ரேட்டை கையில் வைத்திருந்தால், இந்த உலகக் கோப்பைக்கு தகுதி பெற அதிகபட்ச வாய்ப்புகள் உண்டு!