2023 உலக கோப்பை இந்தியா விளையாடும் போட்டி அட்டவணை.. மைதான சாதக பாதகங்கள்.. முழு விபரம் இதோ!

0
3836
ICT

இன்று முதல் ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடர் துவங்க இருக்கிறது. இந்தியாவில் நடைபெறுகின்ற காரணத்தினால் இந்திய அணிக்கு நடைபெற இருக்கும் உலகக் கோப்பை தொடரை வெல்வதற்கான அதிக வாய்ப்பு இருக்கிறது என்று கூறப்படுகிறது!

இந்திய அணி மொத்தம் ஒன்பது லீக் போட்டிகளை இந்தியாவில் 9 மைதானங்களுக்கு பறந்து விளையாடுகிறது. சென்னையில் உலக கோப்பை தொடரை ஆரம்பிக்கும் இந்தியா, லீக் சுற்றை பெங்களூரில் முடிகிறது.

- Advertisement -

இந்த உலகக் கோப்பையில் அதிக கிலோமீட்டர் பயணப்படும் அணியாக இந்திய அணிதான் இருக்கிறது. பயணக் களைப்பு இந்திய அணிக்கு ஒரு பின்னடைவாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

இந்திய அணி இந்த உலகக் கோப்பையில் போட்டி அணியாக பார்க்கப்படும் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து இரண்டு அணிகளையும், சுழற்பந்துவீச்சுக்கு சாதகமான சென்னை மற்றும் லக்னோ மைதானங்களில் விளையாடுவது சாதகமான ஒன்று.

அடுத்து போட்டி அணிகளான நியூசிலாந்து அணியை வேகப்பந்துவீச்சுக்கு குறிப்பாக ஸ்விங் பந்துவீச்சுக்கு சாதகமான இமாச்சல் பிரதேஷ் தர்மசாலாவில் சந்திப்பது, கொஞ்சம் பாதகமான விஷயமே.

- Advertisement -

அடுத்து பாகிஸ்தான் அணியை பேட்டிங் செய்ய சாதகமான குஜராத் அகமதாபாத் மைதானத்தில் சந்திக்கிறது. இதன் காரணமாக பாகிஸ்தான அணியின் பலமான பந்துவீச்சை சமாளித்துக் கொள்ள முடியும். அதேசமயத்தில் பாகிஸ்தானுக்கு இந்தியா போல் வலிமையான பேட்டிங் ஆர்டர் கிடையாது. எனவே இதுவும் சாதகமான விஷயமே.

இந்தியா அடுத்த போட்டி அணியான தென் ஆப்பிரிக்க அணியை கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் விளையாடுகிறது. இந்த மைதானம் சுழற்பந்துவீச்சுக்கு கொஞ்சம் சாதகமான மைதானம். எனவே இப்படியான போட்டிகளில் இந்திய அணியின் மூன்று சுழற்பந்துவீச்சாளர்கள் விளையாடலாம். இந்த மைதானமுமே இந்தியாவிற்கு சாதகமான ஒன்றுதான்.

இந்த வகையில் போட்டி அட்டவணைகளில் பல மைதானங்களுக்கு சென்று விளையாடுவதுதான் பிரச்சனையாக இருக்கிறது. ஆனால் விளையாடக்கூடிய மைதானங்கள் அனைத்தும் இந்தியாவிற்கு சாதகமான மைதானங்களாகத்தான் இருக்கிறது.

2023 ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை இந்திய அணி விளையாடும் போட்டி அட்டவணை :

அக்டோபர் 8 – ஆஸ்திரேலியா – சென்னை சேப்பாக்கம்
அக்டோபர் 11 – ஆப்கானிஸ்தான் – டெல்லி
அக்டோபர் 14 – பாகிஸ்தான் – அகமதாபாத்
அக்டோபர் 19 – பங்களாதேஷ் – புனே
அக்டோபர் 22 – நியூசிலாந்து – தர்மசாலா
அக்டோபர் 29 – இங்கிலாந்து – லக்னோ
நவம்பர் 2 – இலங்கை – மும்பை
நவம்பர் 5 – சவுத் ஆப்பிரிக்கா – கொல்கத்தா
நவம்பர் 11 – நெதர்லாந்து – பெங்களூரு