2023 WC வார்ம்-அப் போட்டிகள் அட்டவணை.. இந்தியாவுக்கு 2 மேட்ச்.. கேரளா ரசிகர்களுக்கு குஷி.!

0
917

2023 ஆம் ஆண்டிற்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவில் வைத்து நடைபெற இருக்கிறது . இந்தப் போட்டிகள் அக்டோபர் மாதம் ஐந்தாம் தேதி துவங்கி நவம்பர் மாதம் 19 ஆம் தேதி வரை இந்தியாவின் 10 நகரங்களில் வைத்து நடைபெற இருக்கிறது .

மொத்தமாக 45 நாட்கள் நடைபெறும் இந்த உலகக் கோப்பை தொடரில் 48 போட்டிகள் நடைபெற உள்ளன. உலகக் கோப்பையில் விளையாடக்கூடிய வீரர்களின் பட்டியலை ஆகஸ்ட் 29ஆம் தேதி முதல் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலில் அனைத்து நாடுகளும் சமர்ப்பிக்க வேண்டும். இதில் இடம் பெற்று இருக்கக் கூடிய வீரர்களை மாற்றுவதற்கான கடைசி தேதி செப்டம்பர் 5 ஆகும். அதன் பிறகு வீரர்களை மாற்ற வேண்டுமென்றால் ஐசிசி-யின் டெக்னிக்கல் குழுவின் ஆலோசனைகளைப் பெற்ற பின்பு மாற்ற முடியும்.

- Advertisement -

உலகக் கோப்பை போட்டிகள் துவங்குவதற்கு முன்பாக உலகக் கோப்பையில் விளையாடும் நாடுகள் பயிற்சி போட்டிகளில் பங்கேற்பது வளமையான ஒன்று . இதற்கான போட்டிகளின் அட்டவணையை சர்வதேச கவுன்சில் வெளியிட்டு இருக்கிறது. அந்த அட்டவணையின் படி உலக கோப்பையில் பங்கேற்க இருக்கும் 10 நாடுகளும் உலகக்கோப்பை துவங்குவதற்கு முன்பாக இரண்டு பயிற்சி ஆட்டங்களில் விளையாட இருக்கின்றன. இந்த பயிற்சி போட்டிகள் விளையாட்டு வீரர்களுக்கு மைதானத்தின் சூழல் மற்றும் தட்பவெட்ப நிலைக்கு தங்களை தகவமைத்துக் கொள்ள உதவும் .

2023 ஆம் ஆண்டிற்கான உலகக் கோப்பை பயிற்சி போட்டிகள் வருகின்ற செப்டம்பர் மாதம் 29ஆம் தேதி துவங்கி அக்டோபர் மாதம் மூன்றாம் தேதி வரை நடைபெறும் என சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்திருக்கிறது. இதில் பத்து போட்டிகள் நடைபெற உள்ளன. இந்தப் போட்டிகள் அசாம் மாநிலம் கௌஹாத்தி தெலுங்கானா மாநில ஹைதராபாத் மற்றும் கேரள மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரம் ஆகிய மூன்று இடங்களில் வைத்து நடைபெற இருக்கிறது. இதில் திருவனந்தபுரம் மற்றும் கௌகாத்தி ஆகிய நகரங்களில் உலகக் கோப்பை காண போட்டிகள் நடைபெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. ஹைதராபாத் உலகக்கோப்பை முக்கிய ஆட்டங்களில் மூன்று போட்டிகளை நடத்துகிறது.

இந்த உலகக்கோப்பை பயிற்சி ஆட்டங்களில் இந்தியா இங்கிலாந்து மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு எதிராக இரண்டு பயிற்சி போட்டிகளில் விளையாட இருக்கிறது . இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டி செப்டம்பர் 30ஆம் தேதி கௌஹாத்தியிலும் காத்திலும் இந்தியா மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கிடையேயான போட்டி அக்டோபர் மூன்றாம் தேதி திருவனந்தபுரத்திலும் வைத்து நடைபெற இருக்கின்றது .

- Advertisement -

பாகிஸ்தான் அணி செப்டம்பர் 29ஆம் தேதி நியூசிலாந்து அணிக்கு எதிராகவும் அக்டோபர் மூன்றாம் தேதி ஆஸ்திரேலியா அணிக்கு எதிராகவும் ஹைதராபாத்தில் வைத்து இரண்டு பயிற்சிய ஆட்டங்களில் விளையாட இருக்கிறது . ஆஸ்திரேலியா அணி செப்டம்பர் 30ஆம் தேதி நெதர்லாந்து அணிக்கு எதிராக திருவனந்தபுரத்திலும் அக்டோபர் மூன்றாம் தேதி பாகிஸ்தான் அணிக்கு எதிராக ஹைதராபாத்திலும் வைத்து விளையாட இருக்கிறது.

மேலும் இலங்கை அணி செப்டம்பர் 29ஆம் தேதி பங்களாதேஷ் அணிக்கு எதிராகவும் அக்டோபர் மூன்றாம் தேதி ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராகவும் கௌஹாத்தியில் வைத்து விளையாட உள்ளது. தென்னாப்பிரிக்கா அணி செப்டம்பர் 29ஆம் தேதி ஆப்கானிஸ்தானிற்கு எதிராகவும் அக்டோபர் இரண்டாம் தேதி நியூசிலாந்து அணிக்கு எதிராகவும் திருவனந்தபுரத்தில் வைத்து விளையாட இருக்கிறது . இந்தப் பத்து பயிற்சி ஆட்டங்களில் நான்கு பயிற்சி ஆட்டங்கள் திருவனந்தபுரத்திலும் நான்கு பயிற்சியாட்டங்கள் கௌஹாத்தியிலும் இரண்டு பயிற்சியா ஆட்டங்கள் ஹைதராபாத்திலும் நடைபெற இருக்கின்றன . உலகக்கோப்பையின் முதன்மையான ஆட்டங்கள் திருவனந்தபுரத்தில் நடைபெறாத நிலையில் நான்கு பயிற்சி போட்டிகள் அங்கு வைத்து நடைபெறுவது தென்னிந்திய ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.

பயிற்சி ஆட்டங்களுக்கான அட்டவணை :

செப் 29 பங்களாதேஷ் (எ) ஸ்ரீலங்கா கௌஹாத்தி

செப் 29 பாகிஸ்தான்(எ) நியூசிலாந்து ஹைதராபாத்

செப் 29 சவுத் ஆப்பிரிக்கா (ள) ஆப்கானிஸ்தான் திருவனந்தபுரம்

செப் 30 இந்தியா (எ) இங்கிலாந்து கௌஹாத்தி

செப் 30 ஆஸ்திரேலியா (எ) நெதர்லாந்து திருவனந்தபுரம்

அக் 2 இங்கிலாந்து (எ) பங்களாதேஷ் கௌஹாத்தி

அக் 2 சவுத் ஆப்பிரிக்கா(எ) நியூசிலாந்து திருவனந்தபுரம்

அக் 3 இலங்கை (எ) ஆப்கானிஸ்தான் கௌஹாத்தி

அக் 3 இந்தியா (எ) நெதர்லாந்து திருவனந்தபுரம்

அக் 3 பாகிஸ்தான் (எ) ஆஸ்திரேலியா ஹைதராபாத்