2023 டிஎன்பிஎல் வரலாற்றில் மூன்று சதங்கள் அட்டகாச சாதனை ; சேப்பாக்கத்தை வீழ்த்தியது நெல்லை!

0
2193
Tnpl2023

நேற்று ஏழாவது டிஎன்பிஎல் தொடரில் 14வது ஆட்டத்தில் சேப்பாக்கம் சூப்பர் கில்லிஸ் அணியும் நெல்லை ராயல் கிங்ஸ் அணியும் மோதிக்கொண்ட பரபரப்பான போட்டி நடைபெற்றது!

இந்தப் போட்டிக்கான தாசில் வென்ற சேப்பாக்கம் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அடியின் நட்சத்திர பேட்ஸ்மேன்கள் பிரதோஷ் ரஞ்சன் பால், ஜெகதீசன் மற்றும் சஞ்சய் யாதவ் யாரும் ரன்கள் கொடுக்கவில்லை.

- Advertisement -

ஆனாலும் இன்னொரு முனையில் நிலைத்து நின்ற நட்சத்திர வீரர் பாபா அபராஜித் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 51 பந்துகளில் நான்கு பவுண்டரி மற்றும் ஐந்து சிக்ஸர்கள் உடன் 79 ரன்கள் குவித்தார்.

இவரது அதிரடி ஆட்டத்தில் காரணமாக சேப்பாக்கம் அணி 20 ஓவர்கள் முடிவில் ஏழு விக்கட்டுகள் இழப்புக்கு 159 ரன்கள் சேர்த்தது. நெல்லை அணியின் தரப்பில் பொய்யாமொழி நான்கு ஓவர்கள் வீசி 25 ரன்கள் தந்து மூன்று விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இந்த இலக்கை நோக்கி விளையாடிய நெல்லை அணிக்கு கேப்டன் அருண் கார்த்திக் மற்றும் ஸ்ரீ நிரஞ்சன் இருவரும் முதல் விக்கட்டுக்கு 79 ரன்கள் பார்ட்னர்ஷிப் தந்து வெற்றியை எளிதாக்கினார்கள்.

- Advertisement -

மிகச் சிறப்பாக விளையாடிய நெல்லை அணியின் கேப்டன் அருண் கார்த்திக் இறுதிவரை களத்தில் நின்று ஆட்டம் இழக்காமல் 61 பந்தில் 10 பவுண்டரி ஐந்து சிக்ஸர்கள் உடன் 104 ரன்கள் குவித்து அசத்தினார்.

ஏழாவது ஆண்டாக நடைபெற்று வரும் டிஎன்பிஎல் டி20 தொடரில் இது அருண் கார்த்திக் அடித்த மூன்றாவது சதமாகும். டிஎன்பிஎல் வரலாற்றில் ஒரு பேட்ஸ்மேன் மூன்று சதங்கள் அடித்திருப்பது இதுவே முதல் முறை

முடிவில் 18.5 ஓவரில் இரண்டு விக்கெட் இழப்புக்கு இலக்கை எட்டி எட்டு விக்கெட் வித்தியாசத்தில் சேப்பாக்கம் சூப்பர் கில்லி அணியை நெல்லை ராயல் கிங்ஸ் அணி வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

ஆண்டுக்கு ஆண்டு டிஎன்பிஎல் லீக் டி20 தொடரின் தரம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்தத் தொடருக்கான ரசிகர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. எல்லா போட்டிக்கும் மைதானத்திற்கு ரசிகர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது!