2023 இந்தியாவில் நடக்கும் ஓடிஐ உலகக் கோப்பை தேதி மற்றும் மைதானங்கள் அறிவிப்பு!

0
1814
Odi WC

மூன்று வடிவ கிரிக்கெட் போட்டிகளிலும் நடுவில் வந்த ஒருநாள் கிரிக்கெட் வடிவத்திற்குதான் முதலில் உலகக் கோப்பை போட்டிகள் நடத்தப்பட்டன. கிரிக்கெட்டில் உலகக் கோப்பை போட்டிகள் என்றாலே அதற்கு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டிகளுக்கு தனித்த ஒரு இடம் கிரிக்கெட் வரலாற்றில் உண்டு!

ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர்களில் எண்ணற்ற மறக்க முடியாத சம்பவங்கள் அரங்கேறி, அவையெல்லாம் அடுத்து வரும் தலைமுறைகளும் கிரிக்கெட் குறித்து சிலிர்ப்பும் பரவசமும் அடையக்கூடிய வகையில் இருக்கக்கூடியவை.

- Advertisement -

1975 ஆம் ஆண்டு முதல் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் நடத்தப்பட்டு வருகிறது. முதல் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது. 79 ஆம் ஆண்டும் வெஸ்ட் இண்டீஸ் அணியை சாம்பியன் பட்டம் வென்றது. இதற்கு அடுத்து ஹாட்ரிக் சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்று எதிர்பார்த்து இருந்த நிலையில், யாருமே எதிர்பார்க்காத கபில்தேவின் இந்திய அணி சாம்பியனாகி ஆச்சரியத்தை தந்தது.

இதுவரை மொத்தம் 12 ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர்கள் நடைபெற்றுள்ளன. இதில் அதிகபட்சமாக ஆஸ்திரேலியா ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்று இருக்கிறது. வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இந்தியா இருமுறை சாம்பியன் பட்டம் வென்றிருக்கிறது. பாகிஸ்தான்,இலங்கை மற்றும் கடைசியாக 2019 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணி தலா ஒரு முறை ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை சாம்பியன் பட்டத்தை வென்றிருக்கின்றன.

கடந்த முறை 2019 ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையை இங்கிலாந்து நடத்த, இந்த முறை 2023 ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரை இந்தியா நடத்துகிறது. தற்பொழுது இதற்கான மைதானங்கள் மற்றும் தேதி அறிவிப்புகள் ஐசிசி வெளியிட்டுள்ளது.

- Advertisement -

இந்தியாவில் நடைபெறும் 13 வது ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் அக்டோபர் ஐந்தாம் தேதி துவங்கி நவம்பர் 19ஆம் தேதி வரை நடக்கிறது. ஐபிஎல் மே 28ஆம் தேதி முடிய, நடுவில் நான்கு மாதங்கள் இடைவெளி விட்டு உலகக் கோப்பைத் தொடர் ஆரம்பிக்க இருக்கிறது.

இந்த உலகக் கோப்பை தொடர் இந்தியாவில் அகமதாபாத், சென்னை, பெங்களூர், டெல்லி, தர்மசாலா, கவ்காதி, ஹைதராபாத், கொல்கத்தா, லக்னோ, இந்தூர், ராஜ்கோட், மும்பை ஆகிய 12 மைதானங்களில் நடக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

2011 உலக கோப்பையில் இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் மோதிய போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. தற்பொழுது சென்னை மைதானமும் உலக கோப்பை போட்டிகள் நடைபெறும் மைதானங்களின் பட்டியலில் இடம் பெற்று இருக்க, இந்திய அணி விளையாடும் போட்டி சென்னை மைதானத்தில் இருக்குமா என்பது ரசிகர்களின் பெரிய எதிர்பார்ப்பாக அமையும். அதேபோல் கடந்த முறை இறுதிப்போட்டி மும்பை வான்கடேவில் நடைபெற இந்த முறை குஜராத் அகமதாபாத்தில் நடைபெறுகிறது!