2023-2024.. இந்தியா விளையாடும் முழு போட்டிகளின் அட்டவணை.. தீவிரமான தொடர்கள் அணிவகுப்பு!

0
12008
ICT

தற்பொழுது ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரை உள்நாட்டில் முடித்துக் கொண்டு, அடுத்த மூன்று நாட்களில் உடனே ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக உள்நாட்டில் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி விளையாடுகிறது.

இந்திய அணிக்கு 2023 ஆம் ஆண்டில் எஞ்சியுள்ள ஒரு மாதத்திலும், அதற்கு அடுத்து 2024 ஆம் ஆண்டு முழுவதும் பல முக்கிய கிரிக்கெட் தொடர்கள் அணிவகுத்து காத்திருக்கிறது. இதற்கிடையே ஒரு ஐபிஎல் தொடரும் ஒரு டி20 உலக கோப்பை தொடரும் இருக்கிறது என்பது முக்கியமானது.

- Advertisement -

தற்பொழுது ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டி20 தொடரை முடித்துக் கொண்டு, இந்திய அணி டிசம்பர் 10ஆம் தேதி தென் ஆப்பிரிக்காவுக்கு சென்று விளையாடுகிறது. அந்த அணியுடன் தலா மூன்று போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுகிறது. மேலும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது.

இதற்கு அடுத்து இந்தியா திரும்பும் இந்திய கிரிக்கெட் அணி ஜனவரி மாதத்தில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் உள்நாட்டில் விளையாடுகிறது.

மீண்டும் உள்நாட்டில் இங்கிலாந்து அணிக்கு எதிராக மிக முக்கியமான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிராக ஜனவரி 25 ஆம் தேதி முதல் விளையாடுகிறது. இந்தத் தொடர் மார்ச் மாதம் 11-ம் தேதி முடிவுக்கு வருகிறது.

- Advertisement -

இதற்கடுத்து இந்திய அணியினர் ஒட்டுமொத்தமாக உள்நாட்டில் நடைபெறும் இந்திய கிரிக்கெட் வாரியம் நடத்தும் 17வது ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறார்கள்.

இந்திய அணி ஐபிஎல் தொடரை முடித்துக் கொண்டு ஜூலை மாதம் தலா மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் இலங்கைக்கு எதிராக விளையாட, இலங்கைக்குச் சுற்றுப்பயணம் செய்கிறார்கள்.

இதற்கு அடுத்து உலக கிரிக்கெட் அணிகள் பங்குபெறும் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடக்கும் டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி பங்கேற்க செல்கிறது.

மேலும் செப்டம்பர் அக்டோபர் மாதத்தில் இந்தியா வரும் பங்களாதேஷ் அணி இந்தியா அணியுடன் இரண்டு டெஸ்ட் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது.

மீண்டும் உள்நாட்டிலேயே இந்திய அணி நியூசிலாந்துக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் விளையாட இருக்கிறது.

இதற்கு அடுத்து 2024ஆம் ஆண்டின் இறுதியில் டிசம்பர் மாதத்தில் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இந்தமுறை ஆஸ்திரேலியாவுக்கு செல்கிறது.

இந்திய அணி விளையாட இருக்கும் இந்த மொத்த போட்டி அட்டவணைகளையும் எடுத்து பார்த்தால், பெரிய அளவில் ஓய்வு இல்லாமல் இந்திய அணி தொடர்ச்சியாக பெரிய தொடர்களில் விளையாட இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெரிய கிரிக்கெட் விருந்து காத்திருக்கிறது!