இந்த ஆண்டின் சிறந்த டி20 அணி தேர்வு; இரண்டு இந்திய வீரர்களுக்கு அணியில் இடம்!

0
3882

2022ம் ஆண்டுக்கான சிறந்த டி20 அணி தேர்வு செய்யப்பட்டுள்ளது.

2022 ஆம் ஆண்டு டி20 போட்டிகளுக்கான ஆண்டாக மாறியது. அனைத்து அணிக்காக அக்டோபர்-நவம்பர் மாதம் நடந்த டி20 உலககோப்பையை கவனத்தில் கொண்டு பல டி20 போட்டிகளில் பங்கேற்றன ஆசியாவில் உள்ள அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை தொடரும் டி20 போட்டியாகவே நடத்தப்பட்டது. இதில் சிறப்பாக செயல்பட தரமான வீரர்களைக் கொண்டு சிறந்த பிளேயிங் லெவன் உருவாக்கப்பட்டிருக்கிறது இந்த பிள்ளைகளை யார் யாரிடம் பெற்றிருக்கிறார் என்பதை காண்போம்.

- Advertisement -

துவக்க வீரர்களாக இங்கிலாந்து அணியை சேர்ந்த ஜோஸ் பட்லர் மற்றும் அலெக்ஸ் ஹேல்ஸ் இருவரும் இருக்கின்றனர். இந்த ஜோடி இங்கிலாந்து அணி டி20 உலககோப்பையை வெல்வதற்கு மிக முக்கிய பங்காற்றியது. பட்லர் பதினைந்து டி20 போட்டிகளில் 4 அரைசதங்கள் உட்பட 462 ரன்கள் அடித்திருக்கிறார்.

3வது இடத்தில் தென்னாபிரிக்கா வீரர் ரைலே ரோசோவ் இருக்கிறார். டி20 போட்டிகளில் இவரது ஸ்ட்ரைக் ரேட் கிட்டத்தட்ட 173 ஆகும். 4வது இடத்தில் சூரியகுமார் யாதவ் இருக்கிறார். இந்தாண்டு மட்டும் 1164 ரன்கள் அடித்துள்ளார் 9 அரைசதங்கள் 2 சதங்களும் அடங்கும். இவரது ஸ்ட்ரைக் ரேட் கிட்டத்தட்ட 188 ஆகும்.

அடுத்ததாக டேவிட் மில்லர் இருக்கிறார். தென்னாபிரிக்கா அணியில் இடம்பெற முடியாமல் தவித்து வந்த இவருக்கு ஐபிஎல் வரப்பிரசாதமாக அமைந்தது. பின்னர் டி20 அணியில் இடம்பிடித்து கலக்கினார். டி20 உலககோப்பையிலும் நல்ல பங்களிப்பை கொடுத்தார். ஆகியால் இவர் சிறந்த பிளேயிங் லெவனில் இடம்பெற்றுள்ளார்.

- Advertisement -

ஆல்ரவுண்டர்கள் வரிசையில் ஹர்திக் பாண்டியா இடம்பெற்றுள்ளார். 3 அரைசதங்கள் உட்பட 607 ரன்கள் அடித்துள்ளார். 16 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.

அடுத்ததாக சாம் கர்ரன் இருக்கிறார். டி20 உலககோப்பையில் தொடர்நாயகன், இறுதிப்போட்டியில் ஆட்டநாயகன் என பல விருதுகளை பெற்றார். இந்தாண்டு 25 விக்கெட்டுகள் மற்றும் பேட்டிங்கில் கிட்டத்தட்ட 300 ரன்கள் என கணிசமான பங்களிப்பை கொடுத்ததால் இவருக்கு இடம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

சுழற்பந்து வீச்சில் இலங்கை வீரர் வணிந்து ஹசரங்கா மற்றும் ஆப்கானிஸ்தான் வீரர் ரஷீத் கான் இருவரும் இருக்கின்றனர். ஹசரங்கா டி20 உலககோப்பையில் 2வது அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவராக இருந்தார். இந்தாண்டு 34 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

வேகபந்துவீச்சில் பாகிஸ்தானை சேர்ந்த ஹாரிஸ் ரவுப் மற்றும் அயர்லாந்து அணியை சேர்ந்த ஜோசுவா லிட்டில் இருவரும் இருக்கின்றனர்.