“2019 நடந்தது.. இப்ப அதே 2023ல.. கடைசியா அம்மா சொன்னதுதான் நடக்குது” – மார்னஸ் லபுசேன் ஆச்சரியப்படத்தக்க விஷயம்!

0
290
Labuschagne

தற்பொழுது ஆஸ்திரேலியா அணி தென் ஆப்பிரிக்காவில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் ஐந்து போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்று மார்ஸ் தலைமையில் விளையாடி வருகிறது!

முதலில் நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை வென்ற ஆஸ்திரேலியா அணி, தற்பொழுது 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியில் நேற்று தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக விளையாடியது.

- Advertisement -

டாசில் தோற்று முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி 222 ரன்கள் மட்டுமே எடுத்துச் சுருண்டது. அந்த அணியின் கேப்டன் டெம்பா பவுமா தனியாக போராடி சதம் அடித்து அணியை 200 ரன்களை தாண்ட வைத்தார்.

இதை அடுத்து இலக்கை நோக்கி களம் இறங்கிய ஆஸ்திரேலியா அணி 113 ரன்களுக்கு ஏழு விக்கெட்டுகளை இழந்து நெருக்கடியில் சிக்கியது. அதே சமயத்தில் ஆஸ்திரேலியா அணியின் ஆல் ரவுண்டர் கேமரூன் கிரீன் பந்து ஹெல்மெட்டில் தாக்கியதால் விளையாடாமல் வெளியேறினார்.

இப்படி இவர் வெளியேறிய காரணத்தினால், இவருக்கு பதிலாக ஒரு பேட்ஸ்மேன் விளையாடலாம் என்கின்ற, புதிய விதியின் காரணமாக மார்னஸ் லபுசேன் கடைசியாக விளையாட வந்து சுழற் பந்துவீச்சாளர் ஆஸ்டன் அகருடன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி 112 ரன்கள் பார்ட்னர்ஷிப் அணியை வெல்ல வைத்தது. பிளேயிங் லெவனில் இல்லாத லபுசேன் விளையாடி ஆட்டநாயகன் விருதை வென்றார். இவர் ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை ஆஸ்திரேலியா அணியில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

போட்டிக்குப் பிறகு பேசிய லபுசேன்
“என் அம்மா போட்டி முழுவதும் இங்கேயே தங்கி இருந்தார். நான் இந்த ஆட்டத்தில் விளையாட போகிறேன் என்று அவர் தொடர்ந்து பிடிவாதமாக இருந்தார். நான் அவரிடம் ‘ பிளேயிங் லெவனை பார்த்தேன் என் பெயர் அதில் இல்லை நான் விளையாட மாட்டேன்’ என்று கூறினேன். ஆனால் நான் விளையாடுவேன் என்று அவர் நினைத்தார். கடைசியில் அவர் நினைத்ததுதான் நடந்தது.

இப்படி நீங்கள் இன்னொரு வீரருக்கு பதிலாக வந்து விளையாடும் பொழுது இயல்பாகவே உங்கள் மீதான அழுத்தம் பெரிதாக இருக்காது. வெளிப்படையாக இந்த போட்டியில் என் மீதான அழுத்தம் எதுவும் இல்லை. நான் ஒருநாள் கிரிக்கெட் விளையாடிய விதம் குறித்து ஏமாற்றம் அடைந்திருந்தேன். கடைசியாக நான் விளையாடிய 10 முதல் 12 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் நான் விரும்பிய தீவிரத்தையும் தைரியத்தையும் காட்டவில்லை என்று உணர்ந்தேன். எனக்கு ஒரு நாள் கிரிக்கெட் உலகக்கோப்பை ஆஸ்திரேலியா அணியில் இடமில்லை என்பது அதிர்ச்சியாக இல்லை!” என்று கூறி இருக்கிறார்!

2019 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற ஆசஸ் கிரிக்கெட் தொடரில் ஸ்டீவ் ஸ்மித் பந்தால் ஹெல்மெட்டில் தாக்கப்பட்டு வெளியேறிய காரணத்தினால், குறிப்பிட்ட அந்த போட்டியில் விளையாட வாய்ப்பு பெற்ற லபுசேன் சிறப்பாக விளையாடி அரை சதம் அடித்தார். பின்பு அடுத்தடுத்த போட்டிகளில் அந்த தொடரில் இவர் விளையாடும் அணியில் இடம் பெற்றார். தற்பொழுது உலகக்கோப்பைக்கு முன்பாகவும் இதே ஆரம்பித்திருக்கிறது. ஆனால் இவர் உலகக்கோப்பை அணியில் இடம் பெறுவாரா? என்று பொறுத்துப் பார்க்க வேண்டும்!